உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற இங்கிலாந்து! பிரித்தானியா அரச குடும்பத்தினர் செல்ல வேண்டுமா?

Report Print Santhan in பிரித்தானியா
370Shares
370Shares
lankasrimarket.com

ரஷ்யாவில் உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

32 அணிகள் பங்கேற்ற இந்த் தொடரில் 16 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன, அதன் பின் 8 அணிகள் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

தற்போது 8 அணிகள் 4 அணிகளாக அரையிறுதியில் மோதவுள்ளன. இதில் காலிறுதிப் போட்டியில் சுவீடன் அணியை வீழ்த்திய இங்கிலாந்து அரையிறுதியில் பெல்ஜியம் அணியுடன் மோதவுள்ளது.

இந்நிலையில் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று ரசிகர்களிடம் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தி வருகிறது. அதில் உலகக்கிண்ணப் போட்டியில் இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி அரையிறுதிப் போட்டி வரை முன்னேறியுள்ளது.

அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் அது ஒரு வரலாற்று வெற்றியாக பார்க்கப்படும். ஆனால் ரஷ்யா வந்த இங்கிலாந்து அணியுடன் பிரித்தானியாவின் முக்கிய அரச உயர் அதிகாரிகள் வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஒரு வரலாற்று வெற்றிக்காக காத்திருக்கும் இங்கிலாந்து அணியை உற்சாகப்படுத்துவதற்கு பிரித்தானியாவின் அரச உயர் அதிகாரிகள் அல்லது அரச குடும்ப உறுப்பினர்கள் வரவேண்டுமா என்று கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

அதில் பெரும்பாலான ரசிகர்கள் ஆம் வர வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அதாவது ரஷ்யாவிற்கு உயர் அதிகாரிகள் செல்லாததற்கு முக்கிய காரணம், பிரித்தானியா அரசுக்கு உளவு பார்த்ததால் ரஷ்ய முன்னாள் உளவாளி Sergei Skripal மீது ரஷ்ய ராணுவத்தால் பயன்படுத்தப்படும் நரம்புகளை செயல் இழக்கச் செய்யும்கொடிய ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதற்கு ஆரம்பம் முதலே பிரித்தானியா பிரதமர் தெரசா மே, ரஷ்யாவுக்கு எதிராகவும் அந்நாட்டு ஜனாதிபதி புதினுக்கு எதிராகவும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார். இதற்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்து வருகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்