72 வயது பாட்டியுடன் தொடர்பு வைத்திருந்த 26 வயது புதுமாப்பிள்ளை: அதிர்ச்சியடைந்த புதுப்பெண்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் புதுமாப்பிள்ளை ஒருவர் 72 வயது பாட்டியுடன் தொடர்பில் இருந்தது அவரின் மனைவியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிர்மிங்காமை சேர்ந்தவர் லிண்ட்சே (24). இவருக்கும் 26 வயதான இளைஞருக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் சமீபகாலமாக கணவரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படுவதை கவனித்த லிண்ட்சே தனியார் விசாரணை ஏஜண்டுகள் மூலம் கணவரை கண்காணிக்க முடிவு செய்து அதற்கு ஏற்பாடுகள் செய்தார்.

அதன்படி ஏஜண்டுகள் லிண்ட்சேவின் கணவரை பின் தொடர்ந்து கண்காணித்தனர்.

அப்போது ஒரு பெண்ணுடன் அவருக்கு தொடர்பு இருப்பதை கண்டுப்பிடித்தனர்.

அந்த பெண் நான்கு பேர பிள்ளைகளை கொண்ட 72 வயதான பாட்டி என்பதை உறுதி செய்த ஏஜண்டுகள் இதை லிண்ட்சேவிடம் கூறினார்கள்.

இதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார் லிண்ட்சே.

இதையடுத்து கணவரை விவாகரத்து செய்துவிடு என லிண்ட்சேவின் குடும்பத்தார் அவரை வலியுறுத்தி வரும் நிலையில் அது குறித்த முடிவை அவர் இன்னும் எடுக்கவில்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்