காதலியை கத்தியால் குத்திய காதலன்: தப்பிக்க 25 அடி உயரத்திலிருந்து குதித்த அதிர்ச்சி காணொளி!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் காதலியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பிப்பதற்காக 25 அடி உயர மாடியிலிருந்து குதித்து காதலின் தப்பி செல்லும் காணொளியை காவலர்கள் வெளியிட்டுள்ளனர்.

இங்கிலாந்தின் வடமேற்கோ பகுதியில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் வசித்து வருபவர் Danielle Richardson(24). இவர் கடந்த பிப்ரவரி 12 ம் தேதி, தனது காதலன் Michael Marler (37) உடன் வெளியில் சினிமா சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது இருவரும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்தியுள்ளனர். போதை அதிகமான சில நிமிடங்களில் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த காதலன், Danielle-வின் கழுத்து, முகம் மற்றும் முதுகு பகுதிகளில் கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே Danielle உயிரிழந்ததும், தப்பிப்பதற்காக வீட்டின் ஜன்னல் பகுதியிலிருந்து கீழே இருந்த காரின் மீது குதித்துள்ளார். 25 அடி உயரத்திலிருந்து திடீரென ஒருவர் குதிப்பதை பார்த்து பொதுமக்கள் அனைவரும் ஆச்சர்யமடைந்துள்ளனர்.

ஆனால் ரத்தக்கறையுடன் காணப்பட்ட Michael அங்கிருந்த பொதுமக்களை தாக்க முற்பட்டதோடு, கார்களையும் திருட முயற்சி செய்துள்ளார். பின்னர் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து Michael-ஐ கைது செய்தனர்.

இதுதொடர்பனா விசாரணை Manchester நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில் குற்றவாளிக்கு தகுந்த தண்டனை கிடைக்கும் என பொலிஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்