கர்ப்பத்தை கைவைத்து மறைத்த இளவரசி மெர்க்கல்: வைரலாகும் புகைப்படம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

கர்ப்பிணியாக இருக்கும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல் தன்னுடைய வயிற்றை கை வைத்து மறைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பிரித்தானிய இளவரசர் ஹரி, கர்ப்பிணியாக இருக்கும் தன்னுடைய மனைவியுடன் அவுஸ்திரேலியா, பிஜி உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொழுதை கழித்து வருகிறார்.

தற்போது பிஜி நாட்டில் இருக்கும் தம்பதியினர் அங்கு நடைபெற்று வரும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகின்றனர்.

நேற்று மாலை நடைபெற இருந்த அரச விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, தி கிராண்ட் பசிபிக் ஹோட்டலில் தங்கியிருந்த தம்பதியினர் வெளியில் வந்தனர்.

அங்கு அவர்களுக்கு தூதரக அதிகாரிகள், உள்ளூர் வணிகத் தலைவர்கள் மற்றும் ஃபிஜியன் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

அப்பொழுது ஹரியின் அருகில் நின்று கொண்டிருந்த மெர்க்கல் கர்ப்பமாக இருக்கும் தன்னுடைய வயிற்றினை இரு கைகளாலும் மறைத்து கொண்டு நின்றார். ஆடை இறுக்கமாக இருந்ததால், அவர் கர்ப்பமாக இருக்கும் தோற்றம் தெரிந்தது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...