பிரித்தானியாவின் புதிய பிரதமர் யார்? உத்தியோகபூர்வ அறிவிப்பு எப்போது? வெளியான தகவல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவின் புதிய பிரதமர் யார் என்ற உத்தியோகபூர்வ தகவல் எதிர்வரும் 23 ஆம் திகதி வெளியாகும் என தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவின் பிரதமராக கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் பொறுப்பில் இருந்துவந்த தெரேசா மே கடந்த மே மாதம் 24 ஆம் திகதி தமது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து ஆளும் கன்சர்வேடிவ் கட்சி பிரித்தானியாவின் அடுத்த பிரதமரை தெரிவு செய்யும் முக்கிய பணியில் களமிறங்கியது.

இதில் இறுதியாக போரிஸ் ஜான்சன் மற்றும் ஜெர்மி ஹன்ட் ஆகிய இருவரில் ஒருவரை பிரதமர் பதவிக்கு தெரிவு செய்யப்படலாம் என்ற தகவல் வெளியானது.

கடந்த ஆறு வாரமாக நடந்துவரும் இந்த தேர்வு நடவடிக்கைகளில் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களின் ஆதரவு பெறும் நபர் பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக தெரிவு செய்யப்படுவார்.

நாடு முழுவதும் உள்ள சுமார் 160,000 கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இதனையடுத்து எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதி பிரித்தானியாவின் புதிய பிரதமர் அறிவிக்கப்படுகிறார்.

அதற்கு முன்னராக 22 ஆம் திகதி மாலை 5 மணிக்கு தேர்தல் வாக்குப்பதிவு முடிவுக்கு வருகிறது. இதில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறும் நபர் பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக அறிவிக்கப்படுவார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...