வலியால் மருத்துவமனைக்கு வந்த நபர்... X-ray-வை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் அறுவை சிகிச்சை செய்யும் போது தொண்டையில் முழு பல் செட்டைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிரித்தானியாவின் கிரேட் யர்மவுத் நகரத்தில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகத்தின் மருத்துவமனையில் 72 வயது முதியவர் ஒருவர் வந்துள்ளார்.

அவர் மருத்துவர்களிடம் தனக்கு இருமல் வரும்போது ரத்தம் வருவதாவும், அதுமட்டுமின்றி மூச்சுவிட சிரமமாக இருப்பதாகவும், எதையும் முழுங்குவது கடினமான வலி இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதனால் மருத்துவர்கள் அவருக்கு சில சோதனைகள் செய்தனர். ஆனால் அந்த சோதனையில் அனைத்தும் சீராக இருப்பது தெரியவந்ததால், X-ray எடுத்து பார்க்க முடிவு செய்துள்ளனர்.

அப்போது X-ray-வைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனெனில் அந்த முதியவரின் தொண்டையில் முழு பல் செட் ஒன்று சிக்கி இருப்பது தெரியவந்துள்ளது.

அதன் பின் இது எப்படி தொண்டைக்குள் வந்தது என்று விசாரித்த போது, 8 நாட்களுக்கு முன்னர் தொண்டையில் அறுவை சிகிச்சை செய்தது தெரியவந்தது.

அப்போது தவறுதலாக அவரது பல் செட் உள்ளே வைக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் விசாரித்து வருகிறது. அத்துடன் பாதிக்கப்பட்ட நபருக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்