வீட்டுக்குள்ளிருந்து வந்த கரும்புகை: துணிச்சலாக நுழைந்து குழந்தையை மீட்ட நபர்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பொருட்களை வீடுகளுக்கு டெலிவரி செய்யும் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர், வீடு ஒன்றிற்குள்ளிருந்து கரும்புகை வர, முன்பின் யோசிக்காமல் வீட்டுக்குள்ளிருந்த ஏழு வாரக் குழந்தை ஒன்றை மீட்க உதவியுள்ளார்.

Nottinghamshire பகுதியில் தனது நிறுவன வாகனத்தில் பொருட்களை டெலிவரி செய்து கொண்டிருந்த Habeel Khan (26), அந்த பகுதியிலுள்ள ஒரு வீட்டுக்குள்ளிருந்து கரும்புகை வருவதைக் கண்டுள்ளார்.

அங்கு விரைந்த Khan, தனது இரண்டு குழந்தைகளுடன் அங்கு நின்று கொண்டிருந்த பெண் ஒருவர், தனது ஏழு வார குழந்தை வீட்டுக்குள் இருப்பதாக கதறிக்கொண்டிருப்பதைக் கண்டார்.

உடனடியாக முன் பின் யோசிக்காமல் அந்த பெண்ணுடன் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார் அவர்.

அங்கு சமையலறை தீப்பற்றி எரிந்து கொண்டிருக்க, அதற்கு பக்கத்திலிருந்த அறையிலிருந்த குழந்தையை அதன் தாய் வாரியணைத்துக்கொள்ள, இருவருமாக எரியும் வீட்டுக்குள்ளிருந்து வெளியேறியிருக்கிறார்கள்.

பின்னர் தீயணைப்பு வீரர்களும், மருத்துவ உதவிக் குழுவினரும் வரும்வரை, அந்த குடும்பத்துக்கு ஆதரவாக நின்று, பின்னரே தனது பணியை தொடர சென்றிருக்கிறார் Khan.

அவர் பணியாற்றும் Asda நிறுவனம், அவரது தன்னலமற்ற சேவையைப் பாராட்டி அவருக்கு விருதொன்றை அளித்துள்ளது.

அவரது சக ஊழியர்கள், அவரை ஹீரோ என்று பாராட்ட, அவரோ, நான் ஹீரோ எல்லாம் இல்லை, என் கடமையைச் செய்தேன் அவ்வளவுதான் என்கிறார் பணிவுடன்,

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers