பணத்துக்கு ஆசைப்பட்டு பிரித்தானிய பெண்மணி செய்த துணிகர செயல்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

நல்ல வேலையிலிருக்கும் ஒரு பிரித்தானிய பெண்மணி, எளிதாக பணம் கிடைக்கிறது என்பதற்காக சிலரை பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு கடத்த முயன்றுள்ளார்.

மேற்கு லண்டனைச் சேர்ந்த Jackie Willis (53)ஐ அணுகிய ஒரு கடத்தல்காரர், மூன்று புலம்பெயர்ந்தோரை பிரித்தானியாவுக்கு கடத்த உதவினால் 3,000 பவுண்டுகள் தருவதாக கூறியுள்ளார்.

அதன்படி, அல்பேனியா நாட்டைச் சேர்ந்த மூன்று பேரை பிரான்சின் கலாயிசிலிருந்து பிரித்தானியாவுக்கு தனது காரின் பின் பக்கத்தில் மறைத்து கொண்டு வர முயலும்போது, Jackie சிக்கினார்.

நீதிமன்றத்தில் உண்மையை ஒப்புக்கொண்ட Jackieக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் காலத்தில் குடும்பத்துடன் செலவிட வேண்டிய நேரத்தில் பேராசையால் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதை எண்ணி நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு கதறியுள்ளார் Jackie.

விடுவிக்கப்பட்டபின் இரண்டாண்டுகளுக்கு பிரான்சுக்குள் நுழையவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Jackie கேட்டரிங் நிறுவனம் ஒன்றில் மூத்த மேலாளராக பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்