குழந்தையை ஒற்றைக்கையில் பிடித்துக்கொண்டு மாடியிலுள்ள ஜன்னல் வழியாக வெளியேறிய நபர்: பதறிய மக்கள்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் வீட்டு மாடியிலுள்ள ஜன்னல் வழியாக குழந்தை ஒன்றை ஆபத்தான முறையில் ஒற்றைக்கையில் பிடித்துக்கொண்டு ஒருவர் வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிரித்தானியாவின் Wakefieldஇலுள்ள வீடு ஒன்றில், ஒருவர் திடீரென ஒற்றைக்கையில் குழந்தையை பிடித்துக்கொண்டு ஜன்னல் வழியாக வெளியேறினார்.

ஜன்னலுக்கு வெளியே நிற்கக்கூட இடமில்லாத நிலையில், அந்த குழந்தையுடன் அவர் நிற்பதைக் கண்ட மக்கள் பதறினர்.

ஒரு பெண், குழந்தை பத்திரம், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என கதறுவதை அந்த வீடியோவின் பின்னணியில் கேட்க முடிகிறது.

கீழே நின்ற நான்கு பேர், ஒருவேளை அந்த நபர் குழந்தையை கீழே போட்டுவிட்டால் என்ன செய்வது என்று பயந்து கைகளை நீட்டியபடியே நின்றுள்ளனர்.

ஆனால், அந்த நபர் கொஞ்சம் நேரம் குழந்தையை வைத்து ஆட்டம் காட்டிவிட்டு, மீண்டும் வீட்டுக்குள்ளேயே போய்விட்டார்.

இருந்தாலும் பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பொலிசார் அந்த வீட்டில் விசாரணை மேற்கொண்ட நிலையில், குழந்தைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற தகவல் மட்டும் கிடைத்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்