15 சிறுவனுக்கு மேலாடை இல்லாத புகைப்படங்களை அனுப்பிய 35 வயது ஆசிரியை: குற்றவாளி என நிரூபணம்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் 35 வயது மதிக்கத்தக்க பள்ளி ஆசிரியை ஒருவர் 15 வயது மாணவனுடன் பாலியல் செயல்களில் ஈடுபட்டதுடன், மேலாடை இல்லாத புகைப்படங்களை அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அவர் குற்றவாளி என நிரூபணம் ஆகியுள்ளது.

பிரித்தானியாவின் Buckinghamshire-ன் Wendover பகுதியை சேர்ந்தவர் Kandice Barber. 35 வயது மதிக்கத்தக்க இவர் Buckinghamshire-ல் இருக்கும் பள்ளி ஒன்றில் ஆசிரியராக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், இவர் 15 வயதுக்குட்பட்ட மாணவனுடன் நெருக்கமாக இருந்ததாகவும், மாணவனுக்கு மேலாடையின்றி இருக்கும் புகைப்படங்களை அனுப்பியதாக கூறி, இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் Kandice Barber இது தொடர்பான பாலியல் குற்றங்களை மறுத்தார். தான் கர்ப்பமானதற்கு, காரணம் கணவர் தான் எனவும், தன்னுடைய ஸ்னாப் ஷாட் ஹேக் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று 15 வயது மாணவனுக்கு தன்னைப் பற்றிய மேலாடை புகைப்படங்களை அனுப்பிய குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு விசாரணை வரும் ஜனவரி மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவனுடன், உடல் அளவில் நெருக்கமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில், உண்மையை சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், பள்ளியில் மேற்பார்வையாளராக குறித்து ஆசிரியை பணிபுரிந்து வந்த போது, சிறுவனுடன் வனப் பகுதியில் உடல் அளவில் நெருக்கமாக இருந்துள்ளதாகவும், கடந்த 2018-ஆம் ஆண்டின், செப்டம்பர் மற்றும் அக்டோபர் இடையில் ஸ்னாப்சாட்டில் தன்னைப் பற்றிய மேலாடை படங்களை அவருக்கு அனுப்பியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்த வழக்கு விசாரணை, Aylesbury Crown நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் மேலாடைஇல்லாத படங்கள் மற்றும் ஒரு வீடியோ தொடர்பான இரண்டு பாலியல் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என கண்டறியப்பட்டுள்ளார்.

ஆனால் சிறுவனிடம் பாலியல் செயலில் ஈடுபடுத்த அல்லது தூண்டியது போன்ற மூன்று குற்றச்சாட்டுகள் மீதான தீர்ப்பில் நீதிபதிகளால் உடன்பட முடியவில்லை.

இதனால் இந்த விசாரணையை வரும் ஜனவரி மாதம் 18-ஆம் திகதி நீதிமன்றம் நடத்துவதற்கு ஒத்தி வைத்துள்ளது.

சிறுவனின் பெயர் சட்ட காரணங்களுக்காக வெளியிடவில்லை. நடைபெற்ற இரண்டு வார விசாரணையின்போது, ​​மூன்று குழந்தைகளின் தாய், அதாவது Kandice Barber, சிறுவனிடம் கணவனை விட பெரிய ஆண்குறி இருப்பதாகவும், அவள் குழந்தையுடன் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறியதாக நீதிபதிகளிடம் கூறியுள்ளார்.

அதே சமயம் Kandice Barber சிறுவனை 2018 செப்டம்பர் மாதம் அணுகியதாகவும், தனது ஸ்னாப்சாட்டில் தன்னைச் சேர்ப்பதற்கு முன்பு தனது தொலைபேசியை எடுத்துக் கொண்டதாகவும் அந்த சிறுவன் தெரிவித்துள்ளான்.

நீதிபதிகளுக்கான தனது சாட்சியத்தில், சிறுவன் Kandice Barber 2018 அக்டோபரில் பள்ளிக்குப் பிறகு அவனுக்கு செய்தி அனுப்பியதாகவும், அவனைச் சந்திக்க விரும்புவதாகவும், அவள் அவனை தனது காரில் அழைத்துச் செல்வதற்கு முன்பு, அவர்கள் ஒரு இடத்தில் உடல் அளவில் நெருக்கமாக இருந்ததாக கூறியுள்ளான்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் , Kandice Barber--ன் மேலாடை படங்கள் பள்ளியில் அதிக அளவில் பகிரப்பட்டதால், இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

மேலும், கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் கர்ப்பமானதால், சிறுவன் பள்ளிக்கு செல்லாமல் ஒரு வித பதட்டத்துடன் இருந்துள்ளான்.

இதனால் நீதிமன்றம், அவருடைய கணவரான டேனியலிடம் விசாரித்த போது, நாங்கள் கடந்த 2018-ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு பிறகு ஒரு குழந்தைக்கு முயற்சித்து வருவதாக கூறியுள்ளார்.

கடந்த செவ்வாய் கிழமை, நடைபெற்ற இந்த விசாரணையில், ஏழு ஆண்கள் மற்றும் ஐந்து பெண்கள் அடங்கிய நடுவர் குழு 9 மணி நேர விசாரணைக்கு பின்னர் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.


மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்