பிரித்தானியாவில் உயிருக்கு போராடும் 11 வயது சிறுவன்! உயிரிழந்த நண்பன்: துயர சம்பவத்தின் பின்னணி

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் கார் விபத்து ஒன்றில் 11 வயது சிறுவன் உயிருக்கு போராடி வரும் நிலையில், அவருடைய நண்பன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த திங்கட் கிழமை Yorkshire-ன் East Riding என்ற இடத்தில், இரு சக்கர வாகனத்தில் Mason Deakin(11) மற்றும் Steven Duffield(10) ஆகியோர் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாரதவிதமாக, காரில் மோதி விபத்தில் சிக்கினர்.

இதில், இருவரும் பலத்த காயம் அடைந்ததால், உடனடியாக அருகில் இருக்கும் ஹல் ராயல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு Steven Duffield உயிரிழந்தார். இதையடுத்து Mason Deakin பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், அங்கு அவர் தற்போது கோமா நிலையில், அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

(Picture: MEN Media)

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, Mason Deakin குடும்பத்தில் பெரும்பாலோர் அவரை மருத்துவமனையில் பார்க்க முடியாமல் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தந்தையான Jordan மற்றும் தயாரான Kirsty Gould தற்போது தங்கள் மகனை ஆதரிப்பதற்காக லீட்ஸில் தங்கியிருக்கிறார்கள், ஆனால் அவர்களும் அடிக்கடி சிறுவனை பார்க்க முடியாது என்பது தான் துயரம்.

எங்கள் குடும்பம் இப்போது ஒரு கஷ்டமான சூழலில் இருக்கிறது, கடினமான நேர்த்தில் இருக்கிறோம், நாங்கள் லீட்ஸில் சிக்கியுள்ளோம், ஆனால் கொரோனா காரணமாக குடும்பத்தினர் அவரைப் பார்க்க முடியாது.

Mason(Picture: MEN Media)

நானும் அவரது அம்மாவும் மட்டுமே ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அவரைப் பார்க்க அனுமதிக்கப்படுகிறோம்.

அது அவர்களுக்கு வெறுப்பாக இருக்கிறது. இது மிகவும் கடினம்.

விஷயங்கள் கொஞ்சம் சாதகமாகத் தெரிகின்றன, ஆனால் எதுவும் தவறாக போகக்கூடும் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

விபத்து நடந்த இடத்தில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞன் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளான்.

Steven (Picture: UNPIXS)

ஹம்ப்சைட் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர், திங்கள்கிழமை மாலை உள்ளூர் நேரப்படி மாலை 6.10 மணியளவில், நீல நிற பி.எம்.டபிள்யூ பைக் சவாரி செய்த இரண்டு சிறுவர்களுடன் மோதியதாகக் கூறப்பட்டது.

சிறுவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு Steven Duffield காயங்களுடன் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்