இனி இந்த உணவு பொருட்கள் கிடையாது... பிரெக்சிட் தொடர்பில் உணவகங்கள் விடுத்துள்ள எச்சரிக்கையால் பிரித்தானியர்கள் அதிர்ச்சி

Report Print Balamanuvelan in பிரித்தானியா
6070Shares

பிரித்தானியா முழுவதும் பிரெக்சிட் காரணமாக இனி சில உணவுப்பொருட்கள் கிடைக்காது என மெக்டொனால்ட்ஸ் உணவகம் விடுத்துள்ள எச்சரிக்கையால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிரித்தானியாவில் பல இடங்களில் அமைந்துள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகங்களில் ஒரு அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.

அதில், பிரெக்சிட்டைத் தொடர்ந்து உணவுப்பொருட்கள் சிலவற்றைப் பெறுவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால், சில உணவு வகைகள் இனி கிடைக்காது, அல்லது, சில உணவு வகைகளில் லெட்டூஸ் மற்றும் தக்காளி போன்ற பொருட்கள் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நினைத்தது போலவே நடந்துவிட்டது, பிரெக்சிட்டால் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு, என்று சமூக ஊடகங்களில் பிரெக்சிட் மீதான தங்கள் கோபத்தையும் உணவுப்பொருட்கள் கிடைக்காது என்பதால் ஏற்பட்ட ஏமாற்றத்தையும் வெளிப்படுத்திவருகின்றனர பிரித்தானியர்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்