காதலனின் மொபைல் போனை ஆராய்ந்த இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி: இந்திப்பட டிவிடிக்களைக் கொண்டு கொடுத்த வித்தியாசமான தண்டனை

Report Print Balamanuvelan in பிரித்தானியா
413Shares

காதலன் தனக்கு துரோகம் செய்கிறாரோ என சந்தேகப்பட்ட ஒரு பெண், அவரது மொபைலை ஆராய்ந்தபோது அது உண்மைதான் என்பதைக் கண்டுபிடித்தார்.

உண்மை நிரூபணமானபோது, பிரித்தானியாவின் Salisburyயைச் சேர்ந்த Lauren Lilley (29) என்ற அந்த பெண், தன் காதலனான Nathan Smithஐ வீட்டை விட்டு துரத்தி, அவரது பொருட்களையும் வெளியே தூக்கி வீசினார்.

பல நாட்கள் அழுது தீர்த்தும் மனம் ஆறாமல், Nathanஐ எப்படியாவது பழிவாங்கவேண்டுமென முடிவு செய்தார் Lilley.

இப்போதும் கூட தனது காதலனின் அமேசான் கணக்கை தன்னால் அணுகமுடியும் என்பது நினைவு வரவே, பொய்யன், ஏமாற்றுக்காரன் என்பது போன்ற தலைப்பு கொண்ட இந்தி சினிமா டிவிடிக்களை Nathanஉடைய பணத்திலேயே வாங்கினார் Lilley.

Nathan கணக்கு வைத்திருக்கும் வங்கி இது குறித்து அவருக்கு தெரியப்படுத்தியபோதுதான் அவருக்கு உண்மை தெரிந்துள்ளது. Nathan, Lilleyயை தொலைபேசியில் அழைக்க, நல்ல பெண் வாழ்க்கையில் விளையாடாதே என அவரை கத்திய பிறகுதான் மனம் அமைதியடைந்துள்ளது Lilleyக்கு.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்