'இப்போதே அதை செய்யுங்கள்..' பிரித்தானியாவை எச்சரிக்கும் WTOவின் புதிய தலைவர்!

Report Print Ragavan Ragavan in பிரித்தானியா
0Shares

பிரித்தானிய அரசு கோவிட் தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு இப்போதே அனுப்ப வேண்டும் என உலக வர்த்தக அமைப்பின் (WTO) புதிய தலைவர் எச்சரித்துள்ளார்.

பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரித்தானியாவின் உபரி தடுப்பூசிகளில் பெரும்பகுதியை ஏழை நாடுகளுக்கு வழங்குவதாக வெள்ளிக்கிழமை G7 கூட்டத்திற்கு முன்னதாக உறுதியளித்தார்.

அவரது முடிவை உலக சுகாதார அமைப்பின் புதிய தலைவர் Ngozi Okonjo-Iweala வரவேற்றுள்ளார்.

ஆனால், உபரி இருக்கும் வரை காத்திருப்பதற்கு பதிலாக, வழங்கக்கூடிய கொரோனா தடுப்புசிகளை பிரித்தானிய அரசு உடனடியாக ஏழை நாடுகளுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பேசிய Ngozi Okonjo-Iweala, "இதற்கான காரணம் மிகவும் எளிதானது. இது பணக்கார நாடுகள் மற்றும் ஏழை நாடுகளுக்கிடையே நலன்கள் சமமான அணுகலைக் கொண்டிருக்கவேண்டும்" என்றார்.

மேலும், சில பணக்கார நாடுகள் அதன் பாதி குடிமக்களுக்கு தடுப்பூசி வழங்கிவருவதாக கூறிய அவர், உலகெங்கிலும் உள்ள தடுப்பூசிகளில் 75% வெறும் 10 நாடுகள் மட்டுமே வழங்கியுள்ளன, 130 நாடுகளுக்கு இதுவரை ஒரு டோஸ் கூட கிடைக்கவில்லை என்று அவர் கூறினார்.

உலக் சுகாதார அமைப்பின் வரலாற்றில் Ngozi Okonjo-Iweala முதல் ஆபிரிக்க மற்றும் முதல் பெண் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி WTOவின் புதிய இயக்குனராக பொறுப்பேற்றார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்