பிரித்தானிய மக்களுக்கு கடுமையான வானிலை எச்சரிக்கை!

Report Print Ragavan Ragavan in பிரித்தானியா
0Shares

பிரித்தானியாவில் வரும் வார இறுதியில் சகாரா பாலைவனத்திலிருந்து கடுமையான தூசிக் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா அதன் குளிர்காலத்தை கடுமையான உறைபணியில் கழித்தது. குறிப்பாக பிப்ரவரி மாதம் தொடங்கியதிலிருந்து அதிகபட்சமாக -20 டிகிரி செல்ஸியஸ் வரையிலான வெப்ப நிலையை அனுபவித்தது.

தற்போது குளிக்கலாம் முடிந்து வசந்த காலம் தொடங்கவுள்ள நிலையில், வரும் வார இறுதியில் மழை பெய்ய உள்ளதாகவும், பிரித்தானியாவின் சில பகுதிகளில் கடந்த வாரத்திற்கு அப்படியே நேர்மாறாக வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸுக்கு வர வாய்ப்புள்ளதாகவும் பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, இந்த வாரக் கடைசியில் சகாரா பாலைவனத்திலிருந்து கடுமையான தூசிக் கற்று (Saharan Dust) வீசும் என பிரித்தானிய மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதே சகாரா தூசி மேகங்கள் மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவின் சில பகுதிகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தி, தெரிவுநிலையைக் குறைத்து, அங்குள்ள மக்களை திணறடித்துக்கொண்டிருக்கிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்