விமானத்தில் மோதிக் கொண்ட இளைஞர்கள்: வைரலாகும் வீடியோ

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்கா விமானத்தில் இருக்கைக்காக இரண்டு இளைஞர்கள் மோதிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து புறப்பட்ட விமானத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

டல்லாசில் இருந்து புறப்பட்ட செளத் வெஸ்ட் விமானம் பர்பேங்க் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. அப்போது விமானத்தில் ஏறிய 2 இளைஞர்கள் ஒரே இருக்கையில் அமர சென்றுள்ளனர்.

இதில் ஏற்பட்ட தகராறில் இரண்டு இளைஞர்களும் விமானத்திலேயே மோதிக்கொண்டுள்ளனர். .

ஒரு இளைஞன் மற்றொரு இளைஞனை கீழே பிடித்துத் தள்ளி முகத்திலேயே சரமாரியாக குத்த, பதறிப் போன பெண் பயணி இருவரையும் தடுத்து இழுக்க முயன்றதில் அந்தப் பெண்மணி மேல் இருவரும் விழுந்து சண்டையை தொடர்ந்துள்ளனர்.

இருவரும் ஜன்னல் சீட்டில் யார் உட்காருவது என சண்டையிட்டு கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த காட்சியை சகபயணிகள் தங்களது போனில் பதிவுசெய்திருந்தனர், இந்த காட்சிகள் இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

இந்நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட லாங்கஸ்டர் பகுதியை சேர்ந்த 37 வயதான நபரை கைது செய்த பொலிசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments