சக்தி வாய்ந்த அணு ஆயுதம் உள்ளது: பதிலடி கொடுத்த டிரம்ப்

Report Print Raju Raju in அமெரிக்கா
272Shares
272Shares
ibctamil.com

கிம் ஜாங்-யிடம் உள்ளதை விட பெரிதான மற்றும் சக்தி வாய்ந்த அணுஆயுதத்தை வெடிக்க வைக்கும் பட்டன் தன் அருகில் உள்ளது டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் சமீபத்தில் அளித்த பேட்டியில், முழு அமெரிக்காவும் நம் அணு ஆயுதங்களின் எல்லைக்குள் தான் உள்ளது

என்னுடைய மேசையில் எப்போதும் அணுகுண்டுகள் பட்டன் உள்ளது, இது உண்மையே தவிர வெறும் அச்சுறுத்தல் இல்லை என கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி தரும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், தன்னுடைய மேசையில் அணு ஆயுதங்களின் பட்டன் எப்போதும் இருக்கும் என வடகொரிய தலைவர் கிம் ஜாங் தெரிவித்திருந்தார்.

என் அருகிலும் அணு ஆயுத பட்டன் உள்ளது, அது வடகொரியா வைத்திருப்பதை விட பெரிது மற்றும் சக்திவாய்ந்ததாகும்,

இதை வெறுமை மற்றும் பட்டினியால் தவிக்கும் அந்த நாட்டை சேர்ந்தவர்கள் யாராவது கிம் ஜாங்கிடம் சொல்லுங்கள்

என் பட்டன் வேலை செய்யும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்