மனைவியைக் கொல்ல தனி விமானத்தை பயன்படுத்திய கணவன்: இறுதியில் நடந்தது என்ன தெரியுமா?

Report Print Balamanuvelan in அமெரிக்கா

தன் மனைவியைக் கொல்வதற்காக ஒரு கணவன் விமானத்தைக் கொண்டு அவள் இருந்த வீட்டில் மோதிய சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Payson பகுதியைச் சேர்ந்தவர் Duane Youd. இவர் குடித்துவிட்டு அவரது மனைவியைத் தாக்கியதைக் கண்ட சிலர் பொலிசாரிடம் புகாரளித்ததால் பொலிசார் அவரைக் கைது செய்தனர்.

ஜாமீனில் வெளிவந்த Duane Youd, தனது முதலாளியின் விமானத்தை எடுத்து வந்து தனது சொந்த வீட்டின் மீதே மோதியுள்ளார்.

இதனால் விமானத்துடன் அவர் இருந்த வீடும் தீப்பற்றி எரிந்தது. இந்த சம்பவத்தில் Duane Youd பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆனால் அவர் யாரைக் கொலை செய்வதற்காக தனி விமானத்தையே எடுத்துக் கொண்டு வந்தாரோ அந்த மனைவி வீட்டின் பின் வாசல் வழியாக ஓடி தப்பித்ததுதான் சுவாரஸ்யம்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்