அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் பெட்டிக்குள் மறைவு செய்த நிலையில் மனித சடலம் மீட்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தை அடுத்து க்ரோடொனா பூங்கா தெற்கு மற்றும் பிராங்க்ளின் தெரு ஆகிய பகுதிகளில் திரளான பொலிசார் குவிக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
வெள்ளியன்று மதியத்திற்கு பின்னர் பிராங்க்ஸ் பகுதியில் அமைந்துள்ள பூங்கா ஒன்றின் நடைபாதை அருகே இரண்டு பெட்டிகளை அங்குள்ள ஊழியர் ஒருவர் மீட்டுள்ளார்.
அதில் மனித சடலம் இருப்பதை அறிந்த அந்த ஊழியர் உடனடியாக தமது மேலதிகாரிகளுக்கு தொலைபேசியில் தகவல் அளித்துள்ளார்.
பின்னர் பொலிசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் பெட்டிகளை சோதனையிட்டு பின்னர் அது மனித சடலங்கள் என்பதை உறுதி செய்தனர்.
துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சடலத்தின் பாலினம் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகாத நிலையில்,
மருத்துவ குழுவினர் அழைக்கப்பட்டு சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து க்ரோடொனா பூங்கா தெற்கு மற்றும் பிராங்க்ளின் தெரு ஆகிய பகுதிகளில் திரளான பொலிசார் குவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுள்ளது.