குப்பை தொட்டியில் கிடக்கும் உணவுகளை சாப்பிடும் வசதியான இளம்தம்பதி: என்ன காரணம் தெரியுமா?

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் குப்பை தொட்டிகளில் போடப்படும் உணவுகளை சாப்பிட்டு மாதம் £120லிருந்து £160 வரை மிச்சப்படும் இளம் தம்பதியின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கலிபோர்னியாவை சேர்ந்தவர் யோவி. இவர் மனைவி ரணே ஸ்கோட் (30). யோகா மற்றும் நடன ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 2015ல் இருந்து தம்பதிகள் வேன் ஒன்றில் தான் வசித்து வருகிறார்கள்.

இதிலேயே சமைத்து சாப்பிட்டு தங்களது வாழ்க்கையை கழித்து வருகிறார்கள்.

சுற்றுசூழல் மீது மிகுந்த அக்கறை கொண்ட தம்பதிக்கு பல இடங்களை சுற்றி பார்க்க வேண்டும் என்பதில் தீவிர ஆர்வம் உண்டு.

இதையடுத்து யோவியும், ரணேவும் Dumpster எனப்படும் நடமாடும் குப்பை தொட்டியில் இருக்கும் உணவுகளை தான் சாப்பிட்டு வருகிறார்கள்.

அதாவது, உண்ணுவதற்கு தகுதியான உணவுகளும் குப்பை தொட்டியில் கொட்டப்படுகிறது.

அந்த உணவுகளை மட்டும் தனியாக பிரித்தெடுத்து பதப்படுத்தி சாப்பிட்டு வருகிறார்கள்.

இதன் காரணமாக உணவு விடயத்தில் மட்டும் இந்த தம்பதி மாதம் £120லிருந்து £160 வரை மிச்சப்படுத்துகிறார்கள்.

இதன் மூலர் சேமித்து வைத்த பணத்தை வைத்து இதுவரை Washington, Oregon, Idaho, Utah, Wyoming, South Dakota, California, Nevada, Illinois, Kentucky மற்றும் Texas-க்கு இருவரும் போய் வந்துள்ளார்கள்.

இந்த தம்பதியிடம் சொந்தமாக கார் கூட இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

தங்களை போல உணவுகளை உண்ண பலரையும் யோவியும், ரணேவும் ஊக்குவித்து வருகிறார்கள்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்