கற்பை காக்க போராடிய இளம்பெண்... ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்: நெஞ்சைப் பிசையும் சம்பவம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் டென்னிஸீ மாகாணத்தில் துஸ்பிரயோகத்திற்கு முயன்ற காமுகனை கொன்ற வழக்கில் 15 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வரும் இளம்பெண் எதிர்வரும் 7 ஆம் திகதி விடுதலையாகிறார்.

டென்னிஸீ மாகாணத்தை சேர்ந்த சின்டோயா பிரௌன், தன்னுடைய 16-வது வயதில், 43 வயதான ஜானி ஆலன் என்பவரை அவரது பின்தலையில் துப்பாக்கியால் சுட்டார்.

அதில் ஜான் ஆலன் மரணமடைய, அந்நாட்டு நீதிமன்றம் பிரௌனிற்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

நண்பர் ஒருவரால் போதை மருந்து அளிக்கப்பட்டு, சிறுவயதிலேயே கூட்டு வன்புணர்வுக்கு இரையானவர் பிரெளன்.

இந்த விவகாரம் அறிந்த ஜான் ஆலன் என்பவர் அவரை ஏமாற்றி தமது குடியிருப்புக்கு அழைத்து சென்று தன்னுடன் உறவுக்கு வற்புத்திய நிலையில், தன்னை தற்காத்துக் கொள்ள பெரெளன், ஆலனின் துப்பாக்கியால் அவரை சுட்டுள்ளார்.

இச்சம்பவத்தை பிரெளன் தாமாகவே நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதால், அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

டென்னிஸீ மாகாண சட்டப்படி, ஆயுள்தண்டனை என்பது குறைந்தது 51 ஆண்டுகள். அதன்பிறகுதான் ஒருவர் பிணையில் வெளிவருவதற்குக்கூட விண்ணப்பிக்க முடியும்.

அதேவேளை, சின்டோயா பிரௌன் விடுதலை செய்யப்படவேண்டும் என்றும் அமெரிக்க திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பிரபலங்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

அதன் விளைவாக, அவருடைய தணடனைக்காலத்தை குறைத்து அவரை விடுதலை செய்ய முடிவெடுத்திருக்கிறது டென்னிஸீ மாகாண நிர்வாகம்.

16 வயதில் சிறையில் அடைக்கப்பட்ட பிரௌன், 31 வயதில் விடுதலையானாலும், இன்னும் அவருக்கு முழு விடுதலை வழங்கப்படவில்லை.

அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவர் பிணை அலுவலரைச் சந்திக்க வேண்டும். கண்டிப்பாக ஒரு வேலையில் இருக்க வேண்டும். கவுன்சலிங் செல்ல வேண்டும் உள்ளிட்ட சில நிபந்தனைகள் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்