இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட இளம்பெண்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

இளம்பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்களால் அவர் கைது செய்யப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அரிசோனாவைச் சேர்ந்த Alyza Alder (18) மே 6ஆம் திகதி Honoluluவுக்கு சென்றார். இரண்டு நாட்களுக்குப்பின் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யத் தொடங்கினார் Alyza.

ஹவாய் தீவுக்கு வருவோர் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக 14 நாட்கள் தங்களை கட்டாயம் தனிமைப்படுத்தவேண்டும் என கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, Alyza தனிமைப்படுத்துதலில் இருந்திருக்கவேண்டும்.

ஆனால், மே 8ஆம் திகதியே அவர் கடற்கரையில் எடுக்கப்பட்ட படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யத் தொடங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Alyza தனிமைப்படுத்துதலில் இருக்கவேண்டிய நேரத்தில் Laie என்ற இடத்திலுள்ள ஒரு உணவகத்தில் வேலையும் செய்துகொண்டிருந்திருக்கிறார்.

Alyzaவை அந்த உணவகத்தில் வைத்தே பொலிசார் கைது செய்துள்ளனர். மாகாணத்தின் ஊரடங்கு விதிகளை மீறியதாக Alyza மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்