ஏரியில் மூழ்கிக்கொண்டிருந்த மகன்களைக் காப்பாற்ற சென்ற தந்தைக்கு நேர்ந்த சோகம்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவில் ஏரி ஒன்றில் மூழ்கிக்கொண்டிருந்த மகன்களைக் காப்பாற்றச் சென்ற தந்தை தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இண்டியானாவைச் சேர்ந்த 17 மற்றும் 12 வயது இளைஞர்கள் இருவர் மிச்சிகன் ஏரியில் குளித்துக்கொண்டிருக்கும்போது, தண்ணீரில் சிக்கி தத்தளித்துள்ளனர்.

அப்போது, அந்த இளைஞர்களின் தந்தை மகன்களைக் காப்பாற்றுவதற்காக சென்றுள்ளார். ஏரியில் மொத்தம் நான்கு பேர் தத்தளித்துக் கொண்டிருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மகன்களை மீட்கும் முயற்சியில் அந்த தந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழக்க, மீட்புக்குழுவினர் மகன்களைக் காப்பாற்றி விட்டனர்.

அந்த நான்காவது நபர் யார் என்பதைக் குறித்தோ, உயிரிழந்த தந்தை மற்றும் மகன்கள் பெயர் குறித்தோ பொலிசார் விவரம் எதுவும் வெளியிடவில்லை.

சம்பந்தப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தும் முன் அவர்களது பெயரை வெளியிட இயலாது என பொலிசார் தெரிவித்துவிட்டனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்