3 பிள்ளைகளை கொன்ற தந்தை: நீதிமன்றத்தில் கிடைத்த வெற்றி

Report Print Peterson Peterson in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

கனடா நாட்டில் 3 பிள்ளைகளை கொலை செய்த தந்தை சமூகத்திற்கு ஆபத்தானவர் இல்லை என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரித்தானிய கொலம்பியா மாகாணத்தில் உள்ள மெரிட் நகரில் Allan Schoenborn என்பவர் 10 வயதான மகள், 8 மற்றும் 5 வயதான மகன்களுடன் வசித்து வந்துள்ளார்.

பல்வேறு குடும்ப பிரச்சனைகள் காரணமாக தந்தை அடிக்கடி கோபப்பட்டு வந்துள்ளார்.

இதுமட்டுமில்லாமல், தொடர்ச்சியான இன்னல்கள் காரணமாக அவர் மனநலமும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த 3 பிள்ளைகளையும் தந்தை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.

இவ்வழக்கு தொடர்பான விசாரணையில் கடந்த 2010-ம் ஆண்டு அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும், மனநலக்குறைவிற்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நபர் சமுதாயத்திற்கு மிகவும் ஆபத்தானவர் என பகிரங்கமாக

அறிவிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இக்கோரிக்கை தொடர்பான விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது நீதிபதி அக்கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

‘மனநலம் குன்றியததால் தான் அவர் 3 பிள்ளைகளையும் கொலை செய்துள்ளார்.

மேலும், மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் அவரது நடவடிக்கைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

எனவே, குற்றம் சாட்டப்பட்ட நபர் சமுதாயத்திற்கு மிகவும் ஆபத்தானவர் என அறிவிக்க முடியாது’ என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்