பாகிஸ்தான் ரசிகர்களை மிரளவைத்த விராட் கோஹ்லி

Report Print Arbin Arbin in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி பதிவிட்டிருந்த டுவிட், பாகிஸ்தான் ரசிகர்களை மிரள வைத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 5 ஆம் திகதி ஆசிரியர் தினத்தன்று, தன்னுடைய ஆசான்களுக்கு நன்றி தெரிவித்து விராட் கோஹ்லி டுவிட்டரில் புகைப்படம் ஒன்றை பதிவேற்றி, அந்த பதிவில் உலகம் முழுவதும் உள்ள அனைத்து ஆசிரியர்கள் மற்றும் குறிப்பாக கிரிக்கெட் உலகில் உள்ளவர்களுக்கு வாழ்த்துகள் என குறிப்பிட்டுருந்தார்.

மட்டுமின்றி, பல்வேறு பெயர்களுடன் பெரிய பட்டியல் அடங்கிய ஒரு படத்தையும் அதில் இணைத்திருந்தார். அதில் சச்சின், கங்குலி, டோனி, டிராவிட் உள்ளிட்ட இந்திய வீரர்கள் பெயர்களும், சனத் ஜெயசூர்யா, ஷான் பொல்லக், ரிக்கி பாண்டிங், காலிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன.

மேலும், பாகிஸ்தான் வீரர்கள் இன்சமாம் உல்-ஹாக், இம்ரான் கான் உள்ளிட்டோர் பெயர்களும் அதில் இடம்பெற்று இருந்தன.

கோஹ்லியின் குறித்த பதிவை அவரது பாகிஸ்தான் ரசிகர்கள் பலர் பகிர்ந்தனர். இதனையடுத்து கிரிக்கெட்டில் ஆர்வம் இல்லாத பாகிஸ்தான் இளைஞர்கள் கூட டுவிட்டரில் கோஹ்லி பெயர் டிரென்ட் ஆக்கும் அளவுக்கு அந்த டுவிட் வைரலாகி விட்டது.

இது இப்படி இருக்க, கோஹ்லி வெளியிட்ட பட்டியலில் முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ளே பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்