உலக லெவன் அணியை ஆட்டம் காண வைத்த பாகிஸ்தான்: அசத்திய பாபர் அசாம்

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

உலக லெவன் அணிக்கெதிரான போட்டியில், பாகிஸ்தான் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தானிற்கு உலக லெவன் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

உலக லெவன் அணியில் ஆம்லா, மில்லர், இலியாட் மற்றும் டேரன் சாமி போன்ற அதிரடி வீரர்கள் உள்ளனர்.

இந்நிலையில் இத்தொடரின் முதல் போட்டி பாகிஸ்தானில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற்றது. அதன் படி நாணய சுழற்சியில் வென்ற உலக லெவன் அணி, முதலில் பந்து வீச தீர்மானித்து. உலக லெவன் அணிக்கு டூ பிளிசிஸ் தலைவராக உள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கு பகர் சமான், அஹமது ஷேசாத் ஆகியோர் துவக்க வீரர்களாக களம் இறங்கினர். பகர் சமான் ஆட்டத்தின் முதல் ஓவர் 4-வது பந்தில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த ஷேசாத் உடன் இளம் வீரர் பாபர் ஆசம் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பாபர் ஆசம் சிறப்பாக விளையாடி 33 பந்தில் அரைசதம் அடித்தார்.

அணியின் எண்ணிக்கை 130 ஓட்டங்களாக இருந்த போது, ஷேசாத் 39 ஓட்டங்களில் வெளியேற, சிறப்பாக ஆடி வந்த பாபர் ஆசம் 86 ஓட்டங்களில் வெளியேற பாகிஸ்தான் அணி 15.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 142 ஓட்டங்கள் எடுத்தது.

சோயிப் மாலிக் 20 பந்தில் 38 ஓட்டங்களும், சர்பிராஸ் அஹமது 4 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 197 ஓட்டங்கள் குவித்தது.

198 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உலக லெவன் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக தமீம் இக்பாலூம், ஹாசிம் அம்லாவும் களமிறங்கினர்.

இக்பால் 18 ஓட்டங்களிலும், அம்லா 26 ஓட்டங்களிலும் வெளியேறினர்.

அடுத்து வந்த டிம் பெயின்(25) டூ பிளசிஸ்(29), டேவிட் மில்லர்(9) என வந்த வேகத்தில் பெளலியன் திரும்ப, உலக லெவன் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழப்பிற்கு 177 ஓட்டங்கள் மட்டுமே எடுத்ததால், பாகிஸ்தான் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்