இந்தியாவுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் ஐசிசி-யிடம் புகார்

Report Print Raju Raju in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasri.com

இந்தியாவுக்கு எதிராக டெல்லி காற்று மாசுபாடு குறித்து ஐசிசி-யிடம் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் புகார் அளித்துள்ளது.

இலங்கை - இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்தது.

இப்போட்டியின் இரண்டாவது நாள் முதலே இலங்கை அணி வீரர்கள் மூச்சுவிட முடியாமல் திணறினர்.

இதற்கு டெல்லியில் நிலவிய ஆபத்தான காற்று மாசு தான் காரணம் என தெரிவிக்கப்பட்டது. இதனால் இலங்கை வீரர்கள் பல முறை போட்டியை நடத்தாமல் குறுக்கிட்டு நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இந்திய ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க கொழும்புவில் இருந்து கிளம்பிய சுமார் 10 இலங்கை வீரர்களை அந்நாட்டு நிர்வாகம் மாசுபாட்டை காரணம் காட்டி தடுத்து நிறுத்தியது.

தற்போது இது குறித்து இந்தியாவுக்கு எதிராக, இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் சார்பில் ஐசிசி-யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்