ஒரு தமிழனுக்காக விராட்டை அணிக்கு தேர்வு செய்ய மறுத்த டோனி! உண்மைகள் அம்பலம்

Report Print Samaran Samaran in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

விராட் கோஹ்லி அணியில் இடம்பெற வேண்டும் என்பதற்காக கடந்த 2008-ம் ஆண்டு தமிழக வீரர் பத்ரிநாத் சுப்பிரமணியம் தேர்வு செய்யப்படவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரரும், தலைவருமான திலிப் வெங்சர்க்கர் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் தலைவர் திலிப் வெங்சர்க்கர், கடந்த 2006-ம் ஆண்டில் BCCI அமைப்பின் தேர்வுக்குழுவின் தலைவராக சில ஆண்டுகள் பணியாற்றினார்.

அதன்பின், அவருக்கும் அப்போது BCCI அமைப்பின் பொருளாளராக இருந்த என். சீனிவாசனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அவர் தேர்வுக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் திலிப் வெங்சர்க்கர் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் அவர் நிருபர்களிடம் பேசியதாவது:

கடந்த 2008-ம் ஆண்டு இளையோர் உலகக் கிண்ணம் வென்ற அணிக்கு தலைமை ஏற்று இருந்தவர் இப்போது இருக்கும் விராட் கோஹ்லி என்பது அனைவருக்கும் தெரியும்.

நான் 2008 ல் தேர்வுக்குழுவின் தலைவராக இருக்கும் போது, இலங்கைக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் தொடருக்கான அணியில் விராட் கோஹ்லியை தேர்வு செய்ய வலியுறுத்தினேன்.

எனது ஆலோசனையை தேர்வுக் குழுவில் இருந்த 4 தேர்வாளர்களும் ஒப்புக்கொண்டனர். ஏனென்றால், விராட் கோஹ்லியின் ஆட்டத்தை நான் ஏற்கெனவே பார்த்து இருக்கிறேன். சிறப்பாக இருந்தது என்று கூறியதால் அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

தேர்வுக் குழுக் கூட்டத்தில் இருந்த அப்போதைய தலைவர் எம்.எஸ். தோனியும், பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை, கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விராட் கோஹ்லி விளையாடியதை நாங்கள் பார்த்ததுகூட இல்லை, எப்படி அவரை அணிக்குள் தேர்வு செய்வது என்று தோனியும், கிறிஸ்டனும் கேள்வி எழுப்பினர்.

ஆனால், அப்போது விராட் கோஹ்லி இருந்த பார்ஃம் குறித்து அனைவரிடமும் விளக்கினேன். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கிண்ண போட்டியில் விராட் கோஹ்லி எப்படி செயல்பட்டார்,

வளர்ந்துவரும் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்ட போது அவரின் துடுப்பாட்ட திறமை குறித்து விளக்கினேன். இதை மற்ற தேர்வாளர்கள் 4 பேரும் புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டனர்.

ஆனால், கடைசிவரை தோனியும், கிறிஸ்டனும் மறுத்துவிட்டனர். கோஹ்லியை அணிக்குள் கொண்டுவருகிறேன், அதன்பின் அவரின் திறமையைப் பாருங்கள் என்று நான் அவர்களை கட்டாயப்படுத்தினேன்.

ஆனால், அப்போது BCCI பொருளாளராக இருந்த ஸ்ரீனிவாசனும், தோனியும் தமிழக வீரர் பத்ரிநாத் சுப்பிரமணியத்தை அணிக்குள் கொண்டுவர தீவிரமாக திட்டமிட்டு இருந்தனர்.

ஏனென்றால், அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பத்ரிநாத் விளையாடிக்கொண்டு இருந்ததால், அவர்கள் அணியிலும் இடம் பெறவைக்க துடித்தனர்.

ஆனால், விராட்கோஹ்லி அணிக்குள் வந்தால், பத்ரிநாத்துக்கு இடம் கிடைக்காது என்பதை அறிந்தேன். அதனால், பத்ரிநாத்தை தேர்வு செய்வதை கைவிட்டு, விராட் கோஹ்லியை தேர்வு செய்தேன்.

ஆனால், பத்ரிநாத்தை நான் தேர்வு செய்யாதது குறித்து ஸ்ரீனிவாசன் மிகுந்த அதிருப்தி அடைந்து, என்னிடம் கோபப்பட்டார்.

எதற்காக, எந்த அடிப்படையில் பத்ரிநாத்தை தேர்வு செய்யாமல் இருந்தீர்கள் என்று என்னிடம் ஸ்ரீனிவாசன் கேள்வி கேட்டார்.

ஆஸ்திரேலியாவுக்கு வளர்ந்துவரும் அணி வீரர்களை அனுப்பியபோது, விராட் கோஹ்லியும் அணியில் இடம் பெற்று இருந்தார்.

அப்போது, அவரின் துடுப்பாட்டத்தை பார்த்து இருக்கிறேன் சிறப்பாக இருந்தது, அதனால்தான் அணிக்குள் கொண்டு வந்தேன் என்று நான் தெரிவித்தேன்.

ஆனால், ஸ்ரீனிவாசன் என்னிடம் கடுமையாக வாக்குவாதம் செய்தார். தமிழக அணிக்காக 800 ஓட்டங்கள்வரையில் பத்ரிநாத் எடுத்துள்ளார் அவருக்கு வாய்ப்பு வழங்காதது ஏன் என்றார்.

ஆனால் நான் அடுத்தகட்டமாக வாய்ப்பு அளிக்கப்படும் என்றேன். இப்போதே பத்ரிநாத்துக்கு 29 வயதாகிவிட்டது. பின் எப்போது அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் கேள்வி எழுப்பினார்.

ஆனால், பத்ரிநாத்துக்கு வாய்ப்பு கிடைக்கும், ஆனால், எப்போது கிடைக்கும் என்றெல்லாம் என்னால் கூறமுடியாது என்று ஸ்ரீனிவாசனிடம் கூறினேன்.

ஆனால், அடுத்த சில நாட்களில் என்னைத் தேர்வுக் குழுத் தலைவர் பதவியில் இருந்து நீக்கவிட்டு, தமிழகத்தின் ஸ்ரீகாந்தை தேர்வுக் குழுத் தலைவராக நியமித்தார்.

இதற்கு அப்போது இந்திய கிரிக்கெட் சபை தலைவராக இருந்த சரத்பவாரும் சம்மதித்தார். அத்துடன் என்னுடைய தேர்வுக்குழுத் தலைவர் பதவி முடிவுக்கு வந்தது, இவ்வாறு தெரிவித்தார்.

கோஹ்லியின் அபார திறமை

2008-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் தேர்வான விராட் கோஹ்லி முதல் போட்டியில் 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

ஆனால், 4-வது போட்டியில் அவர் அடித்த அரைசதம் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இலங்கையில் முதல்முறையாக ஒருநாள் தொடரை இந்தியா வெற்றிகரமாகக் கைப்பற்றி வரலாறு படைத்தது.

இன்று விராட் கோஹ்லி உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 போட்டிகளுக்கு தலைவராகவும் அணியை வழிநடத்தி வருகிறார்.

இதுவரை 66 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோஹ்லி 5,554 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 21 சதங்கள் அடங்கும்.

208 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய விராட் கோஹ்லி, 9,588 ஓட்டங்கள் சேர்த்துள்ளார். இதில் 35 சதங்கள் அடித்துள்ளார். சதம் அடித்ததில் சச்சினுக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.

T20 போட்டிகளில் 57 ஆட்டங்களில் பங்கேற்ற விராட்கோஹ்லி 1983 ஓட்டங்கள் சேர்த்துள்ளார். இதில் 18 அரைசதங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்