புரோட்டீன் சத்து குறைவா? இந்த பக்கவிளைவுகள் ஏற்படும்

Report Print Printha in நோய்
0Shares
0Shares
lankasrimarket.com

தசைகளின் வளர்ச்சிக்கு உதவும் புரோட்டீன் சத்துக்கள் நம் உடலில் குறைவாக இருந்தால், பல்வேறு பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.

எனவே புரோட்டீன் குறைபாட்டை உணர்த்தும் சில அறிகுறிகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

புரோட்டீன் சத்து குறைவினால் ஏற்படும் பக்கவிளைவுகள்?
  • நம் உடலில் புரோட்டீன் குறைவாக இருந்தால், பசி அதிகம் இருக்கும். இதனால் எந்நேரமும் எதையாவது சாப்பிடுவதால், பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
  • உடலில் ஏற்படும் காயங்கள் விரைவில் குணமடையாது. அவ்வாறு இருந்தால், அது உடலில் புரோட்டீன் சத்துக்கள் குறைவு என்பதை உணர்த்துவதாக அர்த்தம்.
  • புரோட்டீன் சத்து குறைவாக இருந்தால், தோல் மற்றும் நகம் உரிதல், முடி உதிர்ந்து மெலிதல் போன்ற அறிகுறிகள் வெளிப்படும்.
  • உடலில் புரோட்டீன் குறைவாக இருந்தால், தசை வலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்க நேரிடும். இதனால் மீன், சிக்கன், முட்டை, பால் பொருட்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • உடலின் திசுக்களில் சீரான அளவில் நீரைப் பராமரிப்பதில் புரோட்டீன் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே புரோட்டீன் குறைபாடு இருந்தால், உடலில் நீர் வீக்கம் ஏற்படும்.
  • புரோட்டீன் சத்துக் குறைவினால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து, அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளின் மூலம் அவஸ்தைப்படக்கூடும்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments