எதை சாப்பிட்டாலும் உடல் ஒல்லியாக உள்ளதா? இந்த நோய் தான்

Report Print Printha in நோய்
0Shares
0Shares
lankasrimarket.com

வயதிற்கு ஏற்ற உயரமும், உடல் எடையும் மிக அவசியம். ஆனால் சிலருக்கோ எந்த உணவுகளை எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கவே செய்யாது.

அதற்கான காரணம் என்ன? அவர்கள் எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட்டால் உடல் எடையை அதிகரிக்க முடியும் என்பதை பற்றி பார்க்கலாம்.

உடல் எடை மெலிந்து இருப்பது என்ன நோய்?

 • ஒருவரின் வயதுக்கு ஏற்ற சரியான எடை இல்லையெனில், சாதாரண ஊட்டச்சத்துக் குறைபாடு முதல் புற்றுநோய் வரை எந்த நோயாகவும் இருக்கலாம்.

 • வயிற்றில் அல்சர் எனும் வயிற்றுப்புண், குடல்புண் உள்ளவர்களுக்கும் உடல் எடை அதிகரிக்காது.

 • கழிச்சல் எனும் (Irritable Bowel Syndrome) நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை ஏறாது. ஏனெனில் இவர்களுக்கு சாப்பிட்ட உடனே மலம் கழிக்க தூண்டும்.

உடல் எடையை அதிகரிக்க சாப்பிட வேண்டியவை?

 • அரிசி மற்றும் தேங்காய் பாலை உணவில் சேர்த்து சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்க உதவும்.

 • உடைத்த புழுங்கல் அரிசி, பாசிப்பயறு ஆகிய இரண்டையும் வறுத்து நீர் விட்டுக் காய்ச்சி, அதில் சூடான பால், சர்க்கரை, சிறிது பசு நெய் சேர்த்துக் சாப்பிடலாம்.

 • எள்ளு பொடி, எள்ளுச் சட்னி மற்றும் எள்ளு உருண்டை போன்று எள்ளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 • இளம் வயதிலே மெலிந்த உடலோடு இருக்கும் பெண்களுக்கு, எள் மற்றும் உளுந்தை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 • அல்சர் இருந்து உடல் எடை அதிகரிக்காதவர்கள், தினசரி காலையில் நீராகாரம், உடைத்த புழுங்கல் அரிசி கஞ்சி மற்றும் மதியம் மோர், மாலையில் வாழைப்பழம் ஆகியவற்றை சாப்பிட வேண்டும்.

 • உடல் எடை அதிகரிக்காமல் இருப்பவர்கள் வாரம் இரண்டு முறைகள் தேங்காய்ப் பாலை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 • கழிச்சல் நோயின் பாதிப்பு உள்ளவர்கள், மருத்துவ சிகிச்சையுடன் சுண்டை வற்றல், கறிவேப்பிலை, மாதுளை ஆகிய உணவுகளை தினசரி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 • குழந்தையின் எடையை அதிகரிக்க, நேந்திரம் வாழைப்பழத் துண்டுகளுடன் தேனை சேர்த்து, மாலையில் கொடுக்கலாம்.

 • பசும்பால், பசுவின் வெண்ணெய் ஆகிய இரண்டுமே உடல் எடையை அதிகரிக்கக் கூடியது. எனவே இதை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட வேண்டும்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்