பிரான்சில் நிர்வாணமாக போராட்டம் நடத்திய நபர்: காரணம் என்ன?

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
0Shares
0Shares
Cineulagam.com

பிரான்ஸ் தலைநகரில் தமது நிறுவனத்தின் கால ஒப்பந்தம் முடிவடையும் நிலையில் வெளியேற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர் ஒருவர் ஆடைகளை களைந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் பாரிசில் நடந்த 14-வது arrondissement கவுன்சில் கூட்டத்திலேயே Benoit ஈடுபட்டது.

இவர் பணி புரியும் Mon Premier Bureau நிறுவனத்தின் கால ஒப்பந்தனம் முடிவடைய உள்ளது. இதனால் குறித்த நிறுவனத்தை வேறு பகுதிக்கு மாற்றப்படலாம் என்ற கருத்து நிலவுகிறது.

இந்த நகர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவுன்சில் கூட்டம் நடைபெறும் அரங்கில் நுழைந்த Benoit Delol தனது ஆடைகளை களைந்து கையில் வைத்திருந்த பதாகையை காட்டி போராட்டத்தில் ஈடுபட்டார்.

இவரது நிறுவனம் இயங்கும் கட்டிடத்தில் ஏற்கெனவே 20 சிறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. மாத வாடகையாக வெறும் 99 யூரோ மட்டும் செலுத்தினால் போதுமானது.

தற்போது அந்த கட்டிடத்தை வேறு பயன்பாட்டுக்கு மாற்றப்படுவதாகவும், ஒருபகுதியை புதிய குடியிருப்புகளுக்கு ஒதுக்கப்படுவதாகவும் தகவல் வெளியான நிலையிலேயே Benoit Delol இந்த நிர்வாண போராட்டத்தில் குதித்துள்ளார்.

பிரான்சில் நிர்வாண போராட்டம் என்பது புதிதல்ல. கடந்த 2015 ஆம் ஆண்டு குறிப்பிட்ட நகரம் ஒன்றில் கவுன்சிலர்கள் சிலர் சாலையில் விரையும் வாகனங்களை கட்டுப்படுத்தும் வகையில் ஆடைகளை களைந்து நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்