பிரித்தானியா மற்றும் ஜேர்மனியை முந்திய பிரான்ஸ்: எதில் தெரியுமா?

Report Print Raju Raju in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasri.com

கல்வி பயில்வதற்கு வசீகரமான நாடாக மாணவர்கள் அமெரிக்கா, ஜேர்மனி, பிரித்தானியாவை விட பிரான்ஸை விரும்புவது ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

சொந்த நாட்டை விட்டு கல்வி பயில்வதற்காக வேறு நாடுகளுக்கு செல்லும் 14,000 மாணவர்களிடம் இது குறித்த ஆய்வு நடத்தப்பட்டது.

அதில், கல்வி பயில வசீகரமான நாடாக கனடாவை 69 மாணவர்கள் தெரிவு செய்துள்ளனர்.

இதில் இரண்டாமிடத்தில் பிரான்ஸ் 64 சதவீதத்துடன் உள்ளது. மூன்றாமிடத்தில் ஜேர்மனியும், நான்காமிடத்தில் அமெரிக்காவும், ஐந்தாமிடத்தில் பிரித்தானியாவும் உள்ளன.

பிரான்ஸில் உள்ள கலாச்சாரம் மற்றும் பொருளாதார நிலைமையே இங்கு கல்வி பயில நாங்கள் அதிகம் விரும்ப காரணம் என ஆய்வில் பங்கேற்ற பெரும்பாலான மாணவர்கள் கூறியுள்ளனர்.

பிரான்ஸில் தங்கி படிக்கும் அனுபவம் திருப்தியாக உள்ளது என 93 சதவீத மாணவர்கள் கூறியுள்ளனர்.

அதே போல பயிற்சி தரம் காரணமாக கல்வி கற்க பிரான்ஸை தெரிவு செய்தோம் என 46 சதவீத மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்