குழந்தைகள் முதலைகளுடன் விளையாடுவதற்கு தடை: ஜேர்மன் நீதிமன்றம் உத்தரவு

Report Print Kabilan in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் உயிரியல் பூங்காவில் குழந்தைகள் முதலைகள் உள்ளிட்ட உயிரினங்களுடன் விளையாடுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஜேர்மனியின் Friedberg மாகாணத்தில் புகழ்பெற்ற Crocodile Zoo உள்ளது. அங்கு முதலைகள் முதலிய பல அச்சுறுத்தக்கூடிய உயிரினங்களுடன், பார்வையாளர்கள் விளையாடுவதற்கும், தொடுவதற்கும் மற்றும் நீந்துவதற்கும் அனுமதி உள்ளது.

குறிப்பாக, முதலைகளுடன் தண்ணீரில் இறங்கி விளையாடுவதற்கு குழந்தைகளுக்கு சிறப்பு அனுமதி உள்ளது.

ஆனால், இதற்காக எந்தவித பாதுகாப்பு வசதிகளும் தரப்படுவதில்லை. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள முதலைகளால் சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஜேர்மனி நீதிமன்றம் இதுபோன்ற வகையில் விலங்குகளுடன் விளையாடுவது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என்று கூறி விலங்குகளுடன் விளையாடுவதற்கு தடை விதித்தது.

ஆனால், பூங்கா நிர்வாகம் இந்த தடை உத்தரவினை எதிர்த்து மேல்முறையீடு செய்தும் நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது.

இதுகுறித்து பூங்காவின் நிர்வாகிகள் கூறுகையில், 2001ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த உயிரியல் பூங்கா, அனைத்து உயிரினங்களுடனும் பார்வையாளர்கள் சேர்ந்து விளையாடும் வகையில் உருவாக்கப்பட்டது.

தங்களின் நோக்கமே முதலைகள் போன்ற விலங்குகள், கொடியவை அல்ல என்பதை மக்களுக்கு உணர்த்துவதே ஆகும். அதற்காகவே குழந்தைகளும் அவைகளுடன் இணைந்து விளையாட அனுமதித்துள்ளோம்.

நீதிமன்றத்தின் இந்த தடை உத்தரவு தங்களது பூங்காவின் எதிர்காலத்தினை வெகுவாக பாதிக்கும் என தெரிவித்துள்ளனர்.

ஆனால், பூங்காவின் உரிமையாளர், நீதிமன்றத்தின் இந்த முடிவுக்கு எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. அவர் தனது வழக்கறிஞர்களுடன் இது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்