வேகமாக உடல் எடையை குறைக்க இந்த 5 பழங்களை சாப்பிடுங்கள்

Report Print Deepthi Deepthi in ஆரோக்கியம்
0Shares
0Shares
lankasrimarket.com

பழங்களில் விட்டமின், நார்ச்சத்து மற்றும் இயற்கையான சர்க்கரைச்சத்துகள் இருப்பதால் எவ்வித பக்கவிளைகளையும் ஏற்படுத்தாமல் விரைவில் உடல் எடையை குறைக்க உதவும்.

நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சி செய்கிறீர்கள் என்றால், டயட் என்கிற பெயரில் உங்கள் உடலநலன்களை கெடுத்துக்கொள்ளாமல், ஆரோக்கியமான பாதையில், வேகமாக உடல் எடையை குறைப்பதற்கு சிலவகை பழங்கள் உதவுகிறது.

அவகேடா

ஆரோக்கிய கொழுப்புகள் நிறைந்துள்ள அவகேடாவில், உயர் அளவில் மோனோசாட்சுரேட் ஒலிக் ஆசிட்(Monounsaturated oleic acid) மற்றும் தண்ணீர் நிறைந்துள்ளது.மேலும் டெஸ்ட்ரோஸ்டிரான்(Testosterone) ஹார்மோன் உற்பத்திக்கு உதவுகிறது, இந்த ஹார்மோன் கொழுப்பினை குறைக்க உதவுகிறது.

தர்பூசணி

தர்பூசணியில், மலச்சிக்கல், தோல் நோய்கள் மற்றும் எடை குறைத்தல் போன்றவற்றிற்கு உதவுகிறது, ஏனெனில் இதில் தண்ணீர் மற்றும் இயற்கை முறையிலேயே குறைவான கலோரி உள்ளது.தினமும் தர்பூசணி பழம் சாப்பிட்டால், ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் தசைகளில் ஏற்படும் வேதனைகளை குறைக்கிறது.

பேரிக்காய்

பேரிக்காயில் நிறைந்துள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் மற்றும் பசியின்மை பிரச்சனைக்கு தீர்வு தருவதோடு மட்டுமல்லாமல், செரிமானம் சிறந்த முறையில் நடைபெறும், மேலும் எவ்வித உணவுகள் எடுத்தாலும், இதனை சாப்பிடுவதன் மூலம் ஒட்டுமொத்த செரிமானத்திற்கும் உதவுகிறது.

ஸ்ட்ராபெரி

ஸ்ட்ராபெரி பழம் லெப்டின் மற்றும் adiponectin ஹார்மோன் உற்பத்திற்கு உதவுகிறது, இந்த இரு ஹார்மோன்களும் வளர்சிதை மாற்றத்தை அதிகப்பதோடு மட்டுமல்லாமல் கொழுப்பினையும் எரிக்க உதவுகிறது.மேலும், இதில் உள்ள anti-inflammatory என்சைம், நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது திசுக்கள் சேதமடைந்துவிட்டால், அதனை குணப்படுத்த உதவுகிறது, மேலும் உடல் எடை குறைக்கவும் உதவுகிறது.

எலுமிச்சை

எலுமிச்சை பழத்தில் விட்டமின சி மற்றும் சிட்ரிக் ஆசிட் மற்றும் நார்ச்சத்து நிறைந்து உள்ளது, இது மலச்சிக்கல், அஜீரணக்கோளாறு மற்றும் உடல் பருமன் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.

2/5

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments