ஜல்லிக்கட்டுக்கு எதிராகப் பேசிய கிரண் பேடி: பதிலடி கொடுத்த ஆர்ஜே பாலாஜி!

Report Print Arbin Arbin in இந்தியா
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, ஜல்லிக்கட்டுக்கு எதிராகப் பேசியபோது, அதே மேடையில் பிரபல ஆர்ஜே பாலாஜி தக்க பதிலடி கொடுத்து, சரமாரியாகக் கேள்விகள் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னையில் இந்தியா டுடே ஊடக நிறுவனம் சார்பாக, கருத்தரங்க மாநாடு கடந்த 9, 10 ஆகிய 2 நாட்களாக நடைபெற்றது. இதன்போது, பல துறைசார்ந்த பிரபலங்களும் பங்கேற்று, பல்வேறு தலைப்புகளின்கீழ் விவாதம் செய்தனர்.

advertisement

இதன்ஒருபகுதியாக, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு எதிராகப் பேசினார். ஜல்லிக்கட்டு என்ற பெயரில் மாடுகள் சித்ரவதை செய்யப்படுவதாகவும், இதற்கு உச்ச நீதின்றம் தடை விதித்தது சரி எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதே விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்ஜே பாலாஜி குறுக்கிட்டு, தனக்கே உரிய பாணியில் ஆங்கிலத்தில் பேசி கிரண் பேடிக்கு, பதிலடி கொடுத்தார்.

அவர் கூறுகையில், ”நீங்க காலில் போட்டிருக்கும் லெதர் செருப்பு, எதில் இருந்து வந்தது? மாட்டை அறுத்து, அதன் தோலை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களை முதலில் தடை செய்யுங்கள். அது சித்ரவதை இல்லையா”எனக் கேள்வி கேட்டார்.

உடனே, அரங்கில் இருந்த அனைவரும் ஆரவாரத்துடன் கை தட்டினர். கிரண் பேடி வாயடைத்துப் போனார்.

ஆனாலும், பாலாஜி விடவில்லை. தொடர்ந்து, ‘’உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும் என்கிறார். தமிழ்நாட்டிற்கு தண்ணீர் விடச் சொல்லியது உச்ச நீதிமன்றம். அதை யார் மதித்தனர். மதிக்காதவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்,’’ எனவும் கிரண் பேடியைப் பார்த்து சராமரி கேள்விக் கணை தொடுத்தார்.

மேலும், ‘’சமீபத்தில் குஜராத் சென்றிருந்தேன். அங்கே ஒட்டகங்கள் மீது கடுமையான சுமை கொண்ட மூட்டைகள் ஏற்றப்படுகிறது. அது சித்ரவதை இல்லையா? அதை தடை செய்ய முடியுமா,’’ எனவும் கிரண் பேடியை பார்த்து ஆர்ஜே பாலாஜி கேட்டார்.

கடைசி வரை பேச முடியாமல், கிரண் பேடி திணறிப் போனார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments