பள்ளி மாணவர்களை தலை கீழாக நிற்க வைத்து பைப்பால் அடித்த ஹாஸ்டல் வார்டன்

Report Print Santhan in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

இரண்டு மாணவர்களை ஹாஸ்டல் வார்டன் தலைகீழாக நிற்க வைத்து பைப்பால் அடிக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவின் சாகீர்பாத் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினருக்கான விடுதியில் ஏழாம் வகுப்பு படிக்கு இரண்டு மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி மற்ற மாணவர்களுடன் சண்டையும் போட்டுள்ளனர். இதை அறிந்த ஹாஸ்டல் வார்டன் அவர்களை தண்டிக்கும் விதமாக, அங்கிருக்கும் சுவர் ஒன்றில் அவர்களை தலைகீழாக நிற்க வைத்து, தன்னிடம் இருக்கும் பைப்பை வைத்து அடித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோவை அங்கிருக்கும் நபர் யாரோ ஒருவர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த வீடியோ வைரலாக பரவியதால் சாகீர்பாத் மாவட்ட நிர்வாகம் விடுதி வார்டனிடம் விசாரணை நடத்தும் படி உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்