ரோந்து பணிக்கு பறக்கும் பைக்: அசத்தும் துபாய்

Report Print Kabilan in வாகனம்
0Shares
0Shares
lankasrimarket.com

புதிய தொழில்நுட்பத்தை உடனுக்குடன் புகுத்தும் துபாய் சமீபத்தில் தானியங்கி பறக்கும் டாக்சியை அறிமுகம் செய்த நிலையில் தற்போது ரோந்து பணிக்காக பறக்கும் பைக்குகளை வாங்கியுள்ளது.

துபாய் பொலிஸ் ரோந்து பணிக்காக உலகின் விலையுயர்ந்த கார்களை பயன்படுத்தி வந்தது.

இந்நிலையில் பறக்கும் ஹோவர் பைக்குகளை ரோந்து பணி மற்றும் விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடியாக முதலுதவி செய்யும் விதத்தில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த Hoversurf நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த பைக் Scorpion என்று அழைக்கப்படுகிறது.

சுமார் 272 கிலோ எடை கொண்ட இந்த பைக் மணிக்கு 64கி.மீ வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்தது.

மின்சாரத்தில் இயங்கும் இதன் பேட்டரி மூலம் 25 நிமிடங்கள் பறக்க முடியும், ஆளில்லா ரிமோட் கன்ட்ரோல் முறையிலும் இது இயங்கவல்லது.

இந்த ஹோவர் பைக் தவிர்த்து மணிக்கு 200 கி.மீ வேகத்தில் செல்லக் கூடிய மின்சார பைக் மொடலையும் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் திட்டம் உள்ளதால் துபாய் நகரம் அதிவிரைவில் உலகின் முதல் ஸ்மார்ட் நகரமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்