துடிதுடிக்க ரத்த வெள்ளத்தில் சரிந்த தாய்..சொந்த உறவுகளே இப்படி செய்தால்!

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

பாலியல் சித்ரவதைகள், மனரீதியான சித்ரவதைகள், வார்த்தைகள் தொடர்பான சித்ரவதைகள் என உலகளவில் பல்வேறு சித்ரவதைகள் அரங்கேறி வருகின்றன.

ஆனால், இதுபோன்ற சித்ரவதைகள் எவ்வளவு கொடூரமானவை என்பது, அதனை பார்ப்பவர்களுக்கு மட்டுமல்ல, அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அதன் உண்மையான வேதனை புரியும்.

இதுபோன்ற சித்ரவதைகளை அனுபவிப்பதற்கு பதில் நாம் இறந்துவிடுவதே மேல் என நினைக்கும் மனித உயிர்கள் ஏராளம்.

முன்பின் அறிமுகமில்லாத நபர்கள் நம்மை சித்ரவதை செய்வதை விட நமது ரத்த உறவுகள் நம்மை சித்ரவதை செய்வது தான் அதிகம் வலிக்கிறது என சித்ரவதைக்குள்ளான நபர்கள் கூறுவதை கேட்டிருப்போம்.

இதற்கு உதாரணமான சம்பவங்கள் இதோ,

சென்னை அருகே தாயை கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்த மகள் கைது செய்யப்பட்டார்.

பல்லாவரம் அனகாபுத்தூர் அருகே உள்ள குருசாமி நகர், நான்காவது தெருவைச் சேர்ந்தவர் வனஜா (58). இவரது மகள் காயத்ரியின் வருமானத்தை நம்பியே குடும்பம் இருந்தது.

இந்நிலையில் திடீரென காயத்ரி வேலைக்கு போகாத காரணத்தால் தாய்க்கும் மகளுக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில், காயத்ரி தனது தாயை சித்ரவாதை செய்து வந்துள்ளார்.

இந்த சித்ரவதையின் உச்சகட்டமாக காயத்ரி தனது தாயை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்துள்ளார்.

மதுவுக்கு அடிமை

ரஷ்யாவில் மதுவுக்கு அடிமையான தாய் ஒருவர் தனது மகளை தினமும் தொந்தரவு செய்து வந்துள்ளார். எனக்கு நீ எங்கிருந்தாவது பணம் கொண்டுவா. நான் மது அருந்த வேண்டும் என கூறி தினமும் சண்டையிட்டுள்ளார்.

இந்நிலையில் ஒரு பாட்டில் மதுவுக்காக தனது மகளை நபர் ஒருவரிடம் விற்று தனது ஆசையை தீர்த்துள்ளார்.

சீன சம்பவம்

சீனாவில் 92 வயது மூதாட்டியை அவர் மகனும், மருமகளும் சேர்ந்து வீட்டு சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.

சரியான படுக்கை வசதி, கழிவறை வசதி மற்றும் உணவுகள் என எதையுமே அந்த மூதாட்டிக்கு அவர் மகன் செய்து கொடுக்கவில்லை.

சில வருடங்களாக நடந்து வந்த இந்த சித்ரவதை பொலிசாருக்க தெரியவந்தையடுத்து, அவரை மீட்டு பொலிசார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

பத்து மாதம் தன்னை வயிற்றில் சுமந்த தாயை இப்படி கொடுமைப்படுத்திய மகனுக்கு இதயம் இரும்பால் செய்யப்பட்டிருக்கும் என எண்ண தோன்றுகிறது!

அன்றாடம் இதுபோன்ற சித்ரவதைகளுக்கு ஆளாகும் மனிதர்கள் ஏராளம். மனித உயிர்கள் மட்டுமின்றி விலங்கினங்களும் இதுபோன்ற இன்னல்களுக்கு ஆளாகின்றனர். கடந்த ஆண்டில் உயிரை காக்கும் துறையை சேர்ந்த மருத்துவ மாணவர்களே ஒரு குரங்கினை சித்ரவதை செய்து கொடூரமாக கொலை செய்தது தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற சித்ரவதைகளை தடுப்பதற்கு, சட்டங்கள் விதிக்கப்பட வேண்டும் என்று அவசியமில்லை, மனிதர்களின் மனங்களை ஆட்கொண்டு அரக்க குணம் மாறி, மனிதாபிமானம் மலர்ந்தால் போதுமானது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments