அமெரிக்காவில் எந்தவித பணமும் செலுத்தாமல் 13 ஏக்கர் காணி பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் ஒன்று ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
வட கரோலினாவில் Bluebird Hill Farm என்ற நிறுவனத்தினால் புதிய போட்டி ஒன்றை அறிமுகப்படுத்தி வைத்து இந்த சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
இங்கு Why we want to own and operate bluebird hill farm என்ற பெயரில் 200 சொற்களில் கட்டுரை எழுதி வழங்கும் நபரிகளின் சிறந்த கட்டுரைக்காக இந்த காணி பரிசாக வழங்கப்படுகின்றது.
அந்த காணியின் ஏக்கர் அளவு 12.88 ஏக்கராகும். அதன் பெறுமதி 400 லட்சத்து 50ஆயிரம் டொலராகும்
எதிர்வரும் ஜுன் மாதம் இது தொடர்பிலான வெற்றியாளர்களின் பெயர் அறிவிக்கப்படவுள்ளது. அவசியமானவர்கள் அனைவரும் இணையத்தளத்தை பார்வையிட்டு போட்டியில் பங்குபற்ற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.