இந்தியரை கொலை செய்த அமெரிக்கர் மரண தண்டனையிலிருந்து தப்பினார்: நீதிமன்றம் தீர்ப்பு

Report Print Santhan in அமெரிக்கா
0Shares
0Shares
lankasrimarket.com

இந்திய இன்ஜினியரை சுட்டுக் கொன்ற அமெரிக்கருக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா(32). சாப்ட்வேர் இன்ஜினியரான இவர், அமெரிக்காவின் கான்சாஸ் நகரில் மனைவி சுனாயனாவுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ஆம் திகதி பணி முடிந்தவுடன் தன் நண்பர் அலோக் என்பவருடன் கான்சாஸ் நகரில் உள்ள ஆஸ்டின் மதுபான விடுதியில் மது அருந்திக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு மது அருந்திக் கொண்டிருந்த ஆடம் பரின்டன் (52) என்ற அமெரிக்கர் ஸ்ரீனிவாஸ் மற்றும் அவரது நண்பரை தரக்குறைவாக பேசினார்.

இதனால் அங்கே இருந்த மதுபான ஊழியர்கள் உடனடியாக பரின்டனை வெளியேற்றினர். வெளியே சென்ற அவன் திடீரென்று சிறிது நேரத்தில் உள்ளே வந்து ஸ்ரீநிவாசை நோக்கி பார்த்து எங்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று கூறிய படி தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கண்மூடித்தனமாக சுட்டார்.

இதில் ஸ்ரீநிவாஸ் சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியாகினார். அதன் பின் பரின்டனை கைது செய்த பொலிசார் அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி அவனுக்கு மரணதண்டனை விதிப்பதாக அறிவித்தார். இதையடுத்து தனக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை எதிர்த்து ஆடம் மேல்முறையீடு செய்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஸ்ரீனிவாசை சுட்டுக் கொன்ற, ஆடம் பரின்டன் பரோலில் வெளிவர முடியாதபடி, 50 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்