12000 அடி உயர கரும்புகை! மீண்டும் வெடிக்கும் அபாயத்தில் ஹவாய் எரிமலை

Report Print Balamanuvelan in அமெரிக்கா
0Shares
0Shares
lankasrimarket.com

ஹவாய் தீவின் Kilauea எரிமலை எந்த நேரத்திலும் மீண்டும் வெடிக்கலாம் என்று அறிவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இம்முறை ஏற்படவுள்ள எரிமலை வெடிப்பு மிகவும் பயங்கரமானதாக இருக்கும் என நிலவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹவாய் தீவிலுள்ள Kilauea எரிமலை கடந்த 10 நாட்களாக எரிமலைக் குழம்பை கக்கி வருகிறது.

குறைந்தது 20 இடங்களில் பிளவுகள் ஏற்பட்டு எரிமலைக் குழம்பு வெளியாகி வருகிறது. அடர்த்தியான கரும்புகை வானில் 12,000 அடி உயரம் வரைக்கும் பரவியுள்ளது.

சேட்டிலைட் புகைப்படங்கள் எரிமலை வெடிப்புக்கு பின் தீவு எவ்வளவு மோசமான நிலைமைக்கு ஆளாகியுள்ளது என்பதைக் காட்டுகின்றன.

ஏராளமான வீடுகள் அழிந்து நாசமாகி விட்டன, 2000பேர் வரை தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஹவாய் நெருப்புக் கடவுளான Peleஐ சாந்தப்படுத்தும் வகையில் சிலர் மதுபானங்களை படைத்துள்ளனர்.

இந்நிலையில் எரிமலை வெடிக்கும் அபாயத்தைக் குறித்து சற்றும் கவலைப்படாமல் சிலர் சர்வசாதாரணமாக கோல்ஃப் விளையாடிக் கொண்டிருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்