சுமார் 10 அப்பிளிக்கேஷன்களை பிளே ஸ்டோரிலிருந்து அதிரடியாக நீக்கியது கூகுள்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
248Shares

இணைய ஜாம்பவான் ஆன கூகுள் தனது அன்ரோயிட் சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களை பிளே ஸ்டோரினூடாக வழங்கி வருகின்றமை தெரிந்ததே.

எனினும் இங்கு வழங்கப்பட்டும் அப்பிளிக்கேஷன்கள் பயனர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையுமாயின் அவை உடனடியாக நீக்கப்படும்.

இந்த வரிசையில் தற்போது சுமார் 10 அப்பிளிக்கேஷன்கள் நீக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்திலும் முறையற்ற அல்லது அனுமதியற்ற கட்டண அறவீடு தொடர்பான மோசடிகள் காணப்படுவதே இவ்வாறு அகற்றுவதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதோ குறித்த அப்பிளிக்கேஷன்களின் விபரம் வருவமாறு,

  • Cheery Message
  • Relaxation Message
  • Memory Game
  • Loving Message
  • Friend SMS
  • Contact Message
  • Compress Image
  • App Locker
  • Recover File
  • Remind Alarm - Alarm & Timer & Stopwatch App

இந்த அப்பிளிக்கேஷன்கள் உங்கள் மொபைல் சாதனங்களில் நிறுவப்பட்டிருந்தால் அவற்றினை உடனடியாக நீக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்