தங்கத்தைவிட 30 மடங்கு விலை! உலகின் உயர்வான டீ?

Report Print Maru Maru in ஆசியா

சீனாவின் பழமையான புதர்ச்செடியான டா ஹாங் பாவோ (Da Hong Pao) தேயிலையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் டீயே உலகில் விலை உயர்ந்தது.

அதன் விலை 30 மடங்கு எடையுள்ள தங்கத்தின் விலைக்கு அதிகமானது.

2002 இல் பெரும் பணக்காரர்கள் 180,000 யுவான் (28,000 டாலர்) கொடுத்து விலைமதிப்பு மிக்க டா ஹாங் போவா டீயை வெறும் 20 கிராம் வாங்கி அருந்தினர்.

அப்படி அந்த டீ விலைமதிப்பு பெற காரணம் அந்த டீ இலையில் 1,500 ஆண்டுகள் பழமையான கலை வடிவம் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. அதை நம்பும் கலாச்சாரமே இந்த விலைக்கு காரணம்.

இது டீயாக இருந்தாலும் பிரஞ்சு ஒயினின் எளிய வடிவமாக அதை சாப்பிட்டவர்கள் உணர்கிறார்கள். வித்தியாசமான விலையும் இந்த பண்பாடும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

அசல் டா ஹாங் பாவோ டீ தயாரிப்பதற்கும் அவ்வளவு செலவு இல்லை. ஆனாலும், விலையில் டீயின் எடைக்கு 30 மடங்கு எடை தங்கத்தின் விலை சமமாகிறது. ஒரு கிராமுக்கு 1,400 டாலரும் ஒரு குடுவைக்கு 10,000 டாலரும் என உலகத்தின் விலை உயர்ந்த டீ இதுதான்.

”இந்த டீ பார்ப்பதற்கு பிச்சைக்காரன் போலவும் விலைமதிப்பில் பேரரசன் போலவும் திகழ்கிறது.

அதாவது புத்தரின் இதயம் போல பார்க்க எளிமையாகவும் ஆனால், விலைமதிப்பு மிக்கதாகவும் உள்ளது” என்கிறார் இதன் தயாரிப்பாளரான சியாவ் ஹூய்.

இது கூட நல்ல விளம்பரம்தான் தெற்கு சீனாவில், புஜியான் மாகாணத்தில் ஆற்றோர மூடுபனி நகரமான உஷியானில் இந்த தேயிலை உருவாக்கப்படுகிறது.

இருண்ட சிக்கலான பகுதியில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இந்த டா ஹாங் பாவோ தேயிலை காட்சியளிக்கிறது.

அது ஷியாவ் ஹூயின் குடும்ப தேயிலை தோட்டம். அவளும் குடும்பத்தினருமே தயாரிக்கின்றனர்.

வசந்த காலத்தில் மலை மீது சென்று தேநீர் கடவுளை ’லு யு’ என அழைத்து புதிய கிளைகளை பெற்று வர வேண்டும் என்கிறார்.

இது மற்றவரை பின்பற்றவிடாமல் செய்வதற்கான ஒரு உத்தியாக இருக்கலாம்.

உஷியான் மலைச்சாரல் நில அமைப்பு பல நூற்றாண்டுகளாக தேயிலைக்கு புகழானது. இந்த மலைப்பகுதியில் சுண்ணாம்பு பள்ளத்தாக்குகளில் தாதுக்கள் வளமாக உள்ளது.

இது மழைநீரில் கரைந்து தேயிலை தோட்டங்களின் வளர்ச்சிக்கு பயன்படுகிறது.

உயிஷானில் குங் பூ தேயிலை என்ற இன்னொரு சுவையான வகையும் உருவாகியுள்ளது.

இப்படி ருசி சார்ந்து, இங்குள்ள தேயிலைகளை அட்டவணைப்படுத்தலாம். வீடுகளின் அலமாரிகளில் கூட தேயிலை அடுக்கப்பட்டிருக்கிறது. சீனாவும் ஜப்பான் கொண்டாடும் தேயிலை திருவிழாவை போல கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

புகையிலைக்கு கொஞ்சம் குறைவான தீங்கு தேயிலையிலும் இருப்பதாக மருத்துவம் கூறுகிறது.

அது தங்கத்தைவிட பலமடங்கு விலையில் இங்கு விற்பது கவர்ச்சியை தந்து முரண்படுத்துகிறது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments