இன்று குருவின் அதிர்ஷ்டப்பார்வை வீசப்போவது இந்த ராசிக்காரர்கள் மீது தானாம்! உடனே படிங்க

Report Print Kavitha in ஜோதிடம்

இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

மேஷம்

நீங்கள் செய்யும் புண்ணிய காரியங்களால் நல்ல பெயர் கிடைக்கும். தொழிலில் நேர்மையானவராக இருந்தீா்கள் என்றால் உங்களுடைய மதிப்புகள் உயரும்.

பொறுப்புகள் அதிகரிக்கும் நாளாக இன்று இருக்கும். மனதுக்குள் இருக்கும் கவலைகள் தீரும். நில விருத்திகள் உண்டாகும்.

தொழில் மற்றும் வாழ்க்கையில் உங்களுக்கு முன்னேற்றமான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் இருக்கும்.

ரிஷபம்

அந்நியர்களின் மூலமாக நீங்கள் எதிர்பாராத தனவரவு வந்து சேரும். வீட்டில் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். விவாதங்களில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும்.

வாக்குறுதிகளால் உங்களுக்கு கீர்த்தி உண்டாகும். மாணவர்களுக்கு புத்திக்கூர்மை வெளிப்படும் நாள்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மிதுனம்

சொந்த ஊருக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். கடிதத்தின் மூலமாக நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் உண்டாகும். தூர தேசப் பயணங்களின் மூலமாக உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.

தொழிலில் கூட்டாளிகளிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். வீட்டில் உள்ள பிள்ளைகளின் மூலம் சுப விரயச் செலவுகள் உண்டாகும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.

கடகம்

வீட்டில் உள்ளவர்களின் ஆதரவினால் உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட உதவிகள் கிடைக்க கொஞ்சம் கால தாமதம் ஏற்படும்.

புதிய செயல் திட்டங்களைத் தீட்டி, அதற்கான மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வீர்கள். விளையாட்டுத் துறை சம்பந்தப்பட்டவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் பச்சை நிறமும் இருக்கும்.

சிம்மம்

தொழில் மேம்பாட்டுக்காக நண்பர்களுடைய உதவிகளைப் பெறுவீர்கள். பொன், பொருள், ஆபரணச் சேர்க்கைகள் உ்ணடாகும். அறிவு பெருகும்.

ஞானம் பெறுவீர்கள். உங்களுடைய பேச்சில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். சுய தொழில் செய்பவர்களுக்கு நீங்களே எதிர்பாராத வியாபாரங்கள் உண்டாகும்.

அயல்நாட்டு வேலை வாய்ப்புகளின் மூலம் லாபங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

கன்னி

பதவி உயர்வுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். பொது கூட்டங்களில் நீங்கள் பேசும் பேச்சுக்கு ஆதரவுகள் பெருகும்.

கலைஞர்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். எதிர்காலம் சம்பந்தப்பட்ட இலக்குகளினுடைய முடிவுகளால் சிந்தனையில் மாற்றங்கள் உண்டாகும்.

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

துலாம்

வாகனங்களின் மூலம் தனலாபம் உண்டாகும். உங்களுடைய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். புதிய ஆட்களுடைய நட்பு கிடைக்கும்.

பிள்ளைகளின் மூலமாக பெருமை அடைவீர்கள். திருமண வரன்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களுடைய ஆதரவு கிடைக்கும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

விருச்சிகம்

மனதுக்குள் தோன்றுகின்ற பல்வேறு குழப்பங்களால் மனதில் சோர்வு உண்டாகும். உங்களுடன் பிறந்தவர்களால் சுப விரயச் செலவுகள் உண்டாகும்.

உயர் அதிகாரிகளால் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். பொருளாதார நெருக்கடியினால் மந்தத்தன்மை உண்டாகும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

தனுசு

மனதில் துணிவுடன் புதிய ஆராய்ச்சியில் ஈடுபடுவீர்கள். பெரியோர்களுடைய ஆலோசனைகள் உங்களுக்குக் கிடைக்கும்.

தொழிலில் கூட்டாளிகளுக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கும். மனைவியின் உதவியினால் தொழிலில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும்.

நிர்வாகத்தில் உள்ள குறைகளைக் களைவீர்கள். கால்நடைகள் மூலம் உங்களுக்கு லாபம் உண்டாகும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறங்களாக இளம் பச்சை நிறமும் இருக்கும்.

மகரம்

உங்களுடைய வாரிசுகளின் மூலமாக உங்களுக்கு சுப விரயச் செலவுகள் உண்டாகும். மனதுக்குள் புதுவிதமான எண்ணங்கள் வந்து போகும். போட்டிகளில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும்.

நீங்கள் எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். வீண் அலைச்சல்களின் மூலமாக சோர்வுகள் உண்டாகும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பல வண்ண நிறங்களும் இருக்கும்.

கும்பம்

மனதுக்குள் ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். சர்வதேச வணிகம் சம்பந்தப்பட்ட பணிகளில் இழுபறி நிலை உண்டாகும்.

செய்யும் பணிகளை முழு ஈடுபாட்டுடன் செய்யவும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லுங்கள்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.

மீனம்

தந்தையினுடைய உடல் நலத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். தேவையில்லாத பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. அந்நியர்களிடம் கவனத்துடன் இருக்க வேண்டும்.

மூத்த உடன் பிறப்புகளை அனுசரித்துச் செல்லுங்கள். செய்யும் தொழிலில் மேன்மை உண்டாகும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்