குரு பார்வையோடு கோடீஸ்வர யோகத்தை பெற போவது இந்த லக்கினத்தில் பிறந்தவர்கள் தானாம்!

Report Print Kavitha in ஜோதிடம்

குரு பார்த்தால் கோடி நன்மை உண்டாகும் என்பது ஐதீகம் ஆகும்.

ஒருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு ஒன்பதாம் இடம் பாக்ய ஸ்தானம் தான்.

பிறப்பால் கோடீஸ்வரர் ஆவதும், கோடீஸ்வரராக பிறந்து கடைசி வரை கோடீஸ்வரர் ஆக வாழ்வதும் அவரவர் ஜாதகத்தில் சஞ்சரிக்கும் கிரகங்களின் கூட்டணி தீர்மானிக்கிறது.

அந்தவயைில் எந்த லக்னகாரர்களுக்கு எந்த கிரகங்கள் கோடீஸ்வர யோகத்தை தரும் என்று பார்க்கலாம்.

மேஷம் - விருச்சிகம்

மேஷம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குரு ஜாதகத்தில் வலுவாக இருக்க வேண்டும். சூரியன் செவ்வாய் ஒரு ராசியில் இணைந்திருப்பது சிறப்பு.

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ராசி நாதன் செவ்வாய் சூரியன் சந்திரன் வலுவான நிலையில் இணைவது பிரகாசமான யோகத்தை தரும் கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்பை ஏற்படுத்தும். இந்த கிரகங்களை குரு பார்ப்பதும் கோடீஸ்வர யோகத்தை தரும்.

ரிஷபம் - துலாம்

ரிஷப லக்னகாரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தரும் அமைப்பு சனி மற்றும் புதன் கூட்டணியால் கிடைக்கிறது.

இந்த கிரகங்கள் நட்பு ராசியில் இணைந்து சுப கிரகங்களின் பார்வை பெறுவது கோடீஸ்வர யோகத்தை தரும்.

துலாம் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனியும் சுக்கிரனும் ஒரு ராசியில் இணைந்திருந்து பலம் பெற்றிருந்தால் கோடீஸ்வர யோகத்தை தரும்.

மிதுனம் - கன்னி

மிதுனம் கன்னி லக்னங்களில் பிறந்தவர்களுக்கு புதன், சுக்கிரன் கிரகங்கள் நன்மையை தரும்.

புதனும் சுக்கிரனும் பலமான முறையில் ஆட்சி உச்சம் பெற்றோ, நட்பு ராசியில் இணைந்திருந்தால் அது கோடீஸ்வர யோகத்தை தரும்.

கன்னி ராசியில் புதன் ஆட்சி உச்சமடையும் நேரத்தில் சுக்கிரன் இணையும் போது நீசபங்க ராஜயோக அமைப்பை பெறுகிறார்.

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு புதன் உச்சம் பெற்று சுக்கிரனின் தொடர்பு ஏற்படுவது பலமான கோடீஸ்வர யோகத்தை கொடுக்கிறது.

கடகம் சிம்மம்

கடக ராசியில் செவ்வாய் நீசமடைய குரு உச்சமடைகிறார். அதேபோல மகரம் ராசியில் செவ்வாய் உச்சமடைய குரு நீசமடைகிறார்.

குருவும் செவ்வாயும் ஒரு ராசியில் இணைந்து குரு மங்கள யோக அமைப்பை பெறுவது கோடீஸ்வர யோகத்தை தரும்.

கடக லக்னகாரர்களுக்கு தனது லக்னத்தில் குரு, செவ்வாய் இணைவதும் யோகம்தான்.

சிம்மம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன்,புதன் இணைந்து புத ஆதிபத்ய யோகம் அமைப்பை பெறுவதும் செவ்வாய் சுக்கிரன் பலமாக அமைந்து பாக்ய ஸ்தானத்தில் அமையப்பெற்றிருந்தால் அது கோடீஸ்வர யோகத்தை கொடுக்கும்.

மகரம் - கும்பம்

மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சனி, புதன், சுக்கிரன் ஒரு ராசியில் இணைவது பலம். நீசம் பெறாமல் பலமாக இணைந்து சுப கிரகத்தில் பார்வை கிடைப்பது கோடீஸ்வர யோகத்தை தரும்.

அதே போல கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சனி, சுக்கிரன், செவ்வாய் ஒரு ராசியில் இணைந்து பலம் பெற்றிருந்தால் கோடீஸ்வர யோகத்தை கொடுக்கிறது.

தனுசு மீனம்

தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குடும்ப ஸ்தானம், சுக ஸ்தானம், தொழில் ஸ்தானம், லாப ஸ்தானம் ஆகிய இடங்களில் குரு பார்வை இருக்க வேண்டும்.

சூரியனும், புதனும் இணைந்து பலமான இடத்தில் அமைந்து அதை குரு பார்ப்பது கோடீஸ்வர யோகத்தை கொடுக்கும்.

மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குருவும் செவ்வாயும் இணைந்து குரு மங்கள யோகத்துடன் பலமாக அமைந்து நல்ல வீடுகளை பார்வையிடுவது அவசியம்.

அப்படி அமைந்து விட்டால் செவ்வாய் தசையிலோ, குரு தசையிலோ கோடீஸ்வர யோகத்தை கொடுக்கும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்