எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்... பின்னர் துண்டுதுண்டாக கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள்

Report Print Raju Raju in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் எரிக்கப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் உடல் பாகங்கள் ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட நிலையில், அதன் பின்னர் துண்டு துண்டாக கிடைத்த உடல் பாகங்களும் அதே பெண்ணுடையது தான் என தெரியவந்துள்ளது.

மேற்கு மெல்போர்னில் இளம்பெண் ஒருவரின் எரிக்கப்பட்ட உடல் கடந்த பிப்ரவரி மாதம் கண்டெடுக்கப்பட்டது.

விசாரணையில் இறந்த பெண்ணின் பெயர் தமரா பேரல் என்றும் அவர் வன்முறை செயல்களுக்கு எதிராக பிரசாரம் செய்பவர் என்று தெரியவந்தது.

இந்நிலையில் கடந்த 6ஆம் திகதி ஒரு பெண்ணின் துண்டான உடல்பாகங்களை ஏற்கனவே எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட இடத்தின் 200 கிலோ மீட்டர் அருகில் உள்ள இடத்தில் பொலிசார் கைப்பற்றினார்கள்.

அதை வைத்து தடயவியல் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அதன் முடிவு வந்துள்ளது.

அதன்படி தமராவின் மீதி உடல் பாகங்கள் தான் அது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த கொடூர கொலை தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய பொலிசார் ஷேய் கோட்டியூ (22) மற்றும் அவர் சகோதரி கியீன் (19) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த கொலைக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை, ஆனால் மனநலக்குறைபாடு தான் கொலையில் முக்கிய பிரச்சனை என நீதிபதி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமரா கொலை வழக்கில் கைதான ஷேய் மற்றும் கியீன் ஆகிய இருவரும் சிறுவயதிலிருந்தே தமராவின் குடும்ப நண்பர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்