நாளை தடுப்பூசி திட்டத்தை தொடங்கும் அவுஸ்திரேலியா; இன்றே முதல் ஊசியை போட்டுக்கொண்ட பிரதமர் மோரிசன்!

Report Print Ragavan Ragavan in அவுஸ்திரேலியா
0Shares

அவுஸ்திரேலியாவில் திங்கட்கிழமை முதல் குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ள நிலையில், முதல் தடுப்பூசியை அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் இன்றே பெற்றுக்கொண்டார்.

அவுஸ்திரேலியாவின் தடுப்பூசி திட்டம் நாளை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படுகிறது. இந்த வார இறுதிக்குள் குறைந்தது 60,000 டோஸ்கள் குடிமக்களுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில், சனிக்கிழமையன்று தலைநகர் மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் பேரணி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அவுஸ்திரேலியா முழுவதும் தடுப்பூசியின் மீது நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதற்காக முதல் நபர்களில் ஒருவராக பிரதமர் மோரிசன் இன்றே (ஞாயிற்றுக்கிழமை) தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். அவர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும் காட்சி நேரலையாக நாடு முழுவதும் ஒளிபரப்பப்பட்டது.

பிரதமருடன் இன்று சில முன்னணி சுகாதார பணியாளர்கள் மற்றும் முதியோர்கள் உள்ளடங்கிய ஒரு குழு தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டது.

அவுஸ்திரேலியாவில் முதன்முதலில் அங்கீகரிக்கப்பட்ட ஃபைசர் தடுப்பூசி தற்போது வழங்கப்படுகிறது. இரண்டாவதாக கடந்த வாரம் அங்கீகரிக்கப்பட்ட ஆக்ஸ்ஃபோர்டு-அஸ்ட்ராஜெனேக தடுப்பூசி அடுத்த மதம் முதல் விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்