கனடாவில் நிரந்தரக் குடியுரிமை கிடைக்குமா? அச்சத்தில் புலம்பெயர்ந்த கவனிப்பாளர்கள்

Report Print Balamanuvelan in கனடா
370Shares
370Shares
ibctamil.com

கனடா அரசு Caregivers எனப்படும் கவனிப்பாளர்களைக் குறித்த திட்டங்களை மதிப்பாய்வு செய்து வருவதால் இனி தங்களுக்கு கனடாவில் நிரந்தரக் குடியுரிமை கிடைக்குமா கிடைக்காதா என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கனடாவில் இரண்டு வகையான caregivers உள்ளனர். குழந்தைகளைக் கவனித்துக் கொள்பவர்கள் மற்றும் முதியவர்களைக் கவனித்துக் கொள்பவர்கள்.

இவர்களை தொடர்ந்து பணி செய்ய அனுமதிப்பதா, அவர்களுக்கு பணி புதுப்பிப்பு செய்வதா அல்லது அவர்களுக்கு பதில் வேறு புதிய ஆட்களை வேலைக்கு நியமிப்பதா என கனடா அரசு மதிப்பாய்வு செய்து வருகிறது.

இவர்கள் பணியில் அமர்த்தப்பட்டபோதே எது வரை வேலை செய்யலாம் என்கிற திகதியும் அறிவிக்கப்பட்டிருந்தது. நவம்பர் 29, 2014 அன்று வேலையில் அமர்த்தப்பட்ட இவர்களின் கடைசி வேலை நாள் நவம்பர் 29, 2019 ஆகும்.

இந்தத் திகதிக்குப் பிறகு இவர்களை வேலையில் தொடர அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்த மதிப்பாய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. முடிவுகள் நவம்பர் 29, 2019க்கு முன் அறிவிக்கப்படும் என கனடாவின்புலம்பெயர்தல் துறை அறிவித்துள்ளது.

இதனால் வேறு நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து வந்து பணி புரியும் caregiversபலர் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

2006க்கும் 2014க்கும் இடையே நிரந்தரக் குடியுரிமை வழங்கப்பட்ட caregiversஇன் எண்ணிக்கை வருடத்திற்கு சராசரியாக 8000, ஆனால் அதற்குப்பின் விண்ணப்பித்த 2730 பேரில் 20 சதவிகித்தினருக்கு மட்டுமே, அதாவது 555 பேருக்கு மட்டுமே நிரந்தரக் குடியுரிமை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்