இன்று முதல் ஒன்ராறியோ மாணவர்களுக்கு இதற்கு அனுமதி இல்லை!

Report Print Balamanuvelan in கனடா

இன்று முதல் ஒன்ராறியோ மாணவர்களுக்கு வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கல்வி தொடர்பில் மொபைல் பயன்படுத்தப்படவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலோ, உடல் நல பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது வேறு ஏதேனும் அசாதாரண சூழல்களிலோ மட்டுமே மொபைல் போன் பயன்பாட்டுக்கு அனுமதியளிக்கப்படும்.

மற்றபடி, கல்வியின் மீதும் வகுப்பறையில் பாடம் நடத்தப்படும்போது, அந்த குறிப்பிட்ட பாடத்தின் மீதும் மட்டுமே மாணவர்கள் கவனம் செலுத்துவதை உறுதி செய்துகொள்ள விரும்புகிறோம் என்று கூறியுள்ளார் ஒன்ராறியோ கல்வி அமைச்சரான Stephen Lecce.

உண்மை என்னவென்றால், ஏராளமான கவன திசை திருப்பல்கள் வகுப்பறைகளில் காணப்படுகின்றன.

எனவே, கல்வி கற்க வந்த மாணவர்களை கல்வியில் கவனம் செலுத்த வைப்பதே இந்த தடையின் நோக்கம் என்று கூறியுள்ளார் அவர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்