கனடாவில் 3 ஆண்டுகளுக்கு பின் மகனை பார்த்த அகதி தாய்... விமான நிலையத்தில் செய்த கலங்க வைக்கும் காட்சி

Report Print Basu in கனடா

கனடாவில் 3 ஆண்டுகளுக்கு பின் தனது மகனை நேரில் பார்த்த தாய், அவரை கட்டியணைக்க துடித்த சம்பவம் வீடியோவாக வெளியாகி அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது.

அகதி விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு சிரியாவிலிருந்து அகதியாக கனடாவுக்கு வந்த தாய், விமான நிலையத்தில் வைத்து மூன்று ஆண்டுகளில் முதல் முறையாக தனது மகனை நேரில் பார்த்துள்ளார்.

இந்நிகழ்வை அவர்களுடைய குடும்ப உறுப்பினர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். அதில், கனடா விமான நிலையத்தில் தரையிறங்கிய தாய், மகன் எஸ்கலேட்டரில் வரும் போது ஓடி போய் கட்டியணைக்க முயல்கிறார். எனினும், உடன் இருந்த உறவினர்கள் அவரை பிடித்துள்ளனர்.

மகன் இறங்கி வந்த உடனே ஓடிச்சென்று கண்ணீருடன் கட்டியணைத்து தாய் முத்தம் வைக்க, மரியாதைக்குரிய அடையாளமாக மகன் தாயின் கால்களில் முத்தமிட்டுள்ளார். சிரியா குடும்பத்தினர் தற்போது மீண்டும் கனடாவில் ஒன்றிணைந்துள்ளனர்.

குடும்பத்தை ஒன்றிணைக்க பாடுப்பட்ட குடும்ப உறுப்பினர் வீடியோ குறித்து கூறியதாவது, எத்தனை பேர் தங்கள் உறவுகளை இதுபோல சந்திக்க காத்திருக்கிறார்கள் என்பதையும் நாங்கள் நினைவில் கொள்கிறோம் என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்